தடம் தந்த தகைமை - அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் என மலைப்பொழிவில் உரைத்தார் இயேசு.
கடவுளுக்கென ஒரு மொழி உண்டு. அதுவே அமைதி எனும் அற்புத மொழி. எப்போது, எங்கே அந்த மொழி தோற்கிறதோ அப்போது அங்கே வன்முறையே மொழியாகி பேரிரைச்சல் ஏற்படுகிறது. அமைதி என்பது மௌனித்திருப்பது அல்ல, நிசப்தமான நிலையில் கண்மூடிக் கொண்டிருப்பதுமல்ல, அது உள்ளத்தின் ஆழத்தில் எழும் நிறைவுத்
தன்மை. தன்னோடு, தன்னுடன் வாழ்வாரோடு, இயற்கையோடு, இறைவனோடு ஒன்றி வாழ அமைதி எனும் ஆனந்தநிலை அடிப்படைத் தேவை. அதேவேளையில் அது நீதிக்கு முரணானது அல்ல என்பதையும் உணர்ந்திருக்க வேண்டும்.
கியூபா ஒரு பொதுவுடைமை நாடு. சுயசிந்தனையோடு சுயஉருவாக்கத்தில் முன்னேறிச் சென்றதால் ஏனைய ஆதிக்க நாடுகளின் எதிர்ப்புக்கும் ஒதுக்குதலுக்கும் உள்ளானது. என்றாலும் சோர்ந்திடாமல் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் கல்விக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்தது. கோவிட் 19 உலக நாடுகளைச் சூறையாடிய வேளையில் தன்னை ஒதுக்கிய இத்தாலியில் மருத்துவர்களையும், செவிலியர்களையும், மருந்துகளையும் இறக்கி மனிதாபிமானத்தோடு செயலாற்றியபோது இத்தாலி கிய10பாவைக் கடவுளின் வடிவாகப் பார்த்தது. இதுபோன்ற அமைதிக்கான அணுகுமுறைகளில் நாம் கடவுளின் மக்கள் என்பதைச் செயலால் சொல்கின்றோம்.
ஒவ்வொரு சுவாசத்தையும் ஒவ்வொரு அடியையும் அமைதி மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பும் பொறுப்பு நம் ஒவ்வொருவருடையதே.
இறைவா! உம் வருகையின் நோக்கமான அமைதி உருவாக்கப் பணியை வாழ்வில் தொடர வலிமை தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்