தடம் தந்த தகைமை – எலிசாவைச் சந்தித்த சூனேம் பெண்
மெரினா ராஜ் - வத்திக்கான்
எலிசா தாம் உயிர்ப்பித்துக் கொடுத்த சிறுவனின் தாயான பெண்ணை நோக்கி, “நீயும் உன் குடும்பத்தினரும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு உங்களுக்கு வசதியான வேறோர் இடத்தில் தங்கியிருங்கள். ஏனெனில், ஆண்டவர் பஞ்சத்தை வருவித்துள்ளார். அது நாட்டில் ஏழாண்டுகள் நிலைத்திருக்கும்” என்றார். எனவே, அப்பெண் எழுந்து கடவுளின் அடியவர் வாக்கின்படி செய்தார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் புறப்பட்டுப் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று அங்கு ஏழாண்டுகள் தங்கியிருந்தனர்.
ஏழாண்டுகள் கடந்தபின் அந்தப் பெண் பெலிஸ்தியர் நாட்டினின்று திரும்பி வந்து தம் வீடும் நிலங்களும் தமக்குக் கிடைக்கும் பொருட்டு அரசனிடம் முறையிடச் சென்றார். அப்பொழுது அரசனும் கடவுளின் அடியவர்க்குப் பணிவிடை செய்து வந்த கேகசியிடம், “எலிசா புரிந்துள்ள அரும்பெரும் செயல்களையெல்லாம் எனக்குச் சொல்லும்” என்று கேட்டு உரையாடிக் கொண்டிருந்தான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்