வாரம் ஓர் அலசல் – இயேசு சபை அருள்பணி லூயி மரி லெவே
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணி லூயி மரி லெவே அவர்கள், சிவகங்கை மறைமாவட்டத்திலேயே பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி அங்கேயே மரணமடைந்தார். அந்த புனித அருள்பணியாளரை உள்ளூர் மக்கள் புனிதராக போற்றிப் புகழ்ந்தாலும், அவரை புனிதராக அகில உலக திருஅவை அறிவிக்க வேண்டும் என்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அருள்பணி லூயி மரி லெவே அவர்களின் வாழ்க்கை வரலாறு, மற்றும் புனிதர் பட்ட படிநிலை முயற்சிகள் குறித்து நம் வத்திக்கான் வானொலி வந்திருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் சிவகங்கை ஆயர் லூர்து ஆனந்தம். 1987ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி உருவாக்கப்பட்ட சிவகங்கை மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயர் இவர். 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர் லூர்து ஆனந்தம் அவர்கள், அருள்பணி லெவே அவர்களின் புனிதர் பட்ட படிநிலைகளுக்கான முயற்சிகளையொட்டி உரோம் நகர் வந்திருந்தபோது, மே மாதம் 11ஆம் தேதி, சனிக்கிழமை காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் தனியாக சந்தித்து உரையாடினார். புனிதர் பட்ட படிநிலைகளுக்கான முயற்சிகள் குறித்து ஆயர் அவர்கள் நம்மோடு பகிர்ந்த கருத்துக்களை இதோ உங்கள் முன் படைக்கிறோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்