தூய தமத்திரித்துவப் பெருவிழா தூய தமத்திரித்துவப் பெருவிழா 

நேர்காணல் - தூய தமத்திரித்துவப் பெருவிழா

தமதிரித்துவம் (Trinitas) என்ற நம்பிக்கை ஆரம்ப கால திருஅவையில், தந்தை மகன் தூய ஆவியின் உறவை ஒரே கடவுள் விசுவாசத்தில் புரிந்து கொள்ள உருவானது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

புலன்களுக்கும், மனித அறிவுக்கும் எட்டாத இறைவன்,தன்னுடைய இயல்பைப் பற்றி விவிலியத்தில் வெளிப்படுத்துகிறார். இறைவனின் தன்மையையும், சாரத்தையையும் திருவிவிலியத்தில் இறைவாக்கினர், நீதித்தலைவர்கள், அரசர்கள், விவிலிய ஆசிரியர்கள் என்று பலர் வெளிப்படுத்தினாலும், ஆண்டவராம் இயேசுவே இறைவனின் உண்மைகளை நிறைவாக வெளிப்படுத்தினார் என்பது நமது விசுவாசம். கத்தோலிக்கத் தாய்த் திருஅவையின் மிக முக்கியமான விசுவாச படிப்பினைகளில், தமதிரித்துவம் மிக முக்கியமான படிப்பினையாகும். தமதிரித்துவம் (Trinitas) என்ற நம்பிக்கை ஆரம்ப கால திருஅவையில், தந்தை மகன் தூய ஆவியின் உறவை ஒரே கடவுள் விசுவாசத்தில் புரிந்து கொள்ள உருவானது. இத்தகைய தமத்திரித்துவத்தைப் பற்றி இன்றைய நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்முனைவர் மரிய ஆரோக்கியம் கனகா ச.ச.

சலேசிய சபை அருள்முனைவர் மரிய ஆரோக்கியம் கனகா அவர்கள் சென்னை மறைமாநிலத்தை சார்ந்தவர். கடந்த 16 ஆண்டுகளாக உரோமையில் சலேசிய சபையின் தெற்கு ஆசிய மண்டலத்தின் தலைவராகவும், உரோமை மறைமாநிலத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் சலேசியானும் பல்கழைக்கழகம் மற்றும் மாணவர்கள் தங்கும் இல்லங்களிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். தந்தை அவர்களை தமத்திரித்துவம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

நேர்காணல் - தூய மூவொரு கடவுள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 May 2024, 14:21