மியான்மார் வான்வெளித் தாக்குதலில் 2 கிறிஸ்தவ கோவில்கள் சேதம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மியான்மாரின் வழக்கமான இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்கள், மேற்கு மாநிலமான சின், டோன்சாங் நகரில் உள்ள லுங்டாக் கிராமத்தின் கத்தோலிக்க கோவில் ஒன்றையும் பாப்டிஸ்ட் கிறிஸ்த சபை கோவில் ஒன்றையும் தாக்கியுள்ளதாக ICN செய்தி நிறுவனம் கூறுகின்றது.
மே 11 மற்றும் 12 தேதிகளுக்கு இடையில் நிகழ்ந்த இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதலில் மேலும் பொதுமக்களின் ஐந்து வீடுகள் தகர்க்கப்பட்டதாகவும், இதனால் அவர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இங்கு நிகழும் வன்முறை பொதுமக்களைத் தொடர்ந்து பாதிக்கிறது என்று கலே மறைமாவட்டத்தின் ஒரு பகுதியான Sagaing பகுதியில் உள்ள தலத்திருஅவையைச் சேர்ந்த கத்தோலிக்கப் பார்வையாளர் ஒருவர் உள்ளூர் Fides செய்தி நிறுவனத்திடம் உரைத்ததாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
மேலும் கிளர்ச்சிக் குழுக்களை ஒழிப்பதற்காக லுண்டாக் கிராமம் மியான்மார் விமானப்படையால் தாக்கப்பட்டது என்றும், பின்னர் அதன் இராணுவ வீரர்களால் மற்ற இரண்டு கிராமங்களும் ஆக்கிரமிக்கப்பட்டன என்றும் விவரிக்கிறது அச்செய்திக் குறிப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்