தடம் தந்த தகைமை – ஏகூவை அரசனாக்க எண்ணிய எலிசா இறைவாக்கினர்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இறைவாக்கினர் எலிசா இறைவாக்கினரின் குழுவைச் சார்ந்த ஒருவனை அழைத்து, “உன் இடையை வரிந்துகட்டி உன் கையில் இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இராமோத்து கிலயாதுக்குச் செல். அங்குச் சென்றதும் நிம்சியின் மகனான யோசபாத்தின் புதல்வன் ஏகூவைத் தேடிக் கண்டுபிடி. அவனை அணுகி, அவனுடைய தோழர்களினின்று அவனைத் தனியே கூப்பிட்டு ஓர் உள்ளறைக்கு அழைத்துச் செல். அங்கே இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்து அவனை நோக்கி, ‘ஆண்டவர் கூறுவது இதுவே:
உன்னை நான் இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்கிறேன்’ என்று சொல்லி, அவன் மேல் எண்ணெய் வார்ப்பாய். அங்கே நில்லாது கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்துவிடு” என்றார். அவ்வாறே, இறைவாக்கினனான அவ்விளைஞன் இராமோத்து கிலயாதுக்குச் சென்றான். அவன் அங்கு வந்ததும் படைத்தலைவர்கள் அமர்ந்திருந்ததைக் கண்டான். அவன் “தளபதியே! உம்மிடம் ஒரு வார்த்தை சொல்லவேண்டும்” என்றான். அதற்கு ஏகூ, “எங்களுள் யாரிடம்?” என்று கேட்டான். அதற்கு அவன், “தளபதியே! உம்மிடம்தான்” என்றான். எனவே, ஏகூ எழுந்து மாளிகைக்குள் சென்றான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்