பேராயர் இரபேல் தட்டில் பேராயர் இரபேல் தட்டில்  

சீரோ மலபார் வழிபாட்டு முறை திருஅவையில் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி!

இந்தியாவின் சீரோ மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை திருஅவையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் வழிபாட்டு முறை பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாகவே தற்போது இந்த ஆயர் மாமன்றம் கூட்டப்பட்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் சீரோ மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை திருஅவையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் வழிபாட்டு முறை பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாக, அதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராயர் இரபேல் தட்டில் அவர்கள் சிறப்பு ஆயர் ஆயர் மாமன்றத்தைக் கூட்டியுள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த பேராயர் தட்டில் அவர்கள், ஜூன் 3, இத்திங்களன்று, 65 ஆயர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இப்பிரச்சனையைத் தீர்க்க இத்திருஅவையின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான ஆயர் மாமன்றத்தின்  சிறப்பு மெய்நிகர் கூட்டம் நடத்தப்படும் என்று கூறியதாவும் உரைக்கின்றது அச்செய்தி.

எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அருள்பணியார்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள், நற்கருணை இறைவேண்டலின்போது திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் பலிபீடத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற அத்திருஅவையின் ஆயர் மாமன்றத்தால்  அங்கீகரிக்கப்பட்ட சடங்குமுறை விதிகளைப் பின்பற்றுவதற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்த வேளை இந்தப் பிரச்சனை உருவாகியது என்றும் அச்செய்திக் குறிப்பு குறிப்பிடுகின்றது.

அதேவேளையில், நற்கருணை இறைவேண்டலின்போது திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் இறைமக்களைப் பார்த்த வண்ணம்தான் இறைவேண்டல் செய்ய வேண்டும் என அருள்பணியாளர்கள் விரும்புகின்றனர் என்றும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2024, 15:20