திருத்தூதர்கள் தூய பேதுரு, தூய பவுல் திருத்தூதர்கள் தூய பேதுரு, தூய பவுல் 

நேர்காணல் – திருஅவையின் தூண்களான தூய பேதுரு தூய பவுல்

உயிர்த்த இயேசு கிறிஸ்து வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், திருஅவையின் முதல் தலைவராக செயல்பட்டவர் புனித பேதுரு. உயிர்த்த ஆண்டவரால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, புறஇனத்தாரின் திருத்தூதராக விளங்கியவர் புனித பவுல்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருஅவையின் இரு பெரும் தூண்களாக விளங்குபவர்கள் திருத்தூதர்களான தூய பேதுரு மற்றும் தூய பவுல். யூதர்கள் மட்டுமன்று புறஇனத்தார் நடுவிலும் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தவர்கள். நம் ஆண்டவர்  இயேசு கிறிஸ்துவின் மீது இவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையே தொடக்கத் திருஅவையின் வளர்ச்சிக்கு உரமூட்டியது. உயிர்த்த இயேசு கிறிஸ்து வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், திருஅவையின் முதல் தலைவராக செயல்பட்டவர் புனித பேதுரு. உயிர்த்த ஆண்டவரால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, புறஇனத்தாரின் திருத்தூதராக விளங்கியவர் புனித பவுல். இத்தகைய இருபெரும் திருத்தூதர்களின் விழாவினை  திருஅவை ஜூன் 29 அன்று நினைவுகூர்கின்றது.  இன்றைய நம் நேர்காணலில் திருத்தூதர்களாக தூய பேதுரு மற்றும் தூய பவுல் பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து  கொள்பவர்  அருள்தந்தை.பால் ஆரோக்கியம். வேலூர் மறைமாவட்டத்தை சார்ந்த அருள்தந்தை பால் ஆரோக்கியம் அவர்கள் லூக்கா நற்செய்தி பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பயின்று வருகின்றார். தந்தை அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

நேர்காணல் - திருத்தூதர்கள் தூய பேதுரு மற்றும் தூய பவுல் - அருள்தந்தை.பால் ஆரோக்கியம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2024, 07:46