அரசன் ஏகூ பணியாளருடன் அரசன் ஏகூ பணியாளருடன்  

தடம் தந்த தகைமை - பாகாலை வழிபட்டோரை அழிக்க எண்ணிய ஏகூ

ஏகூ ஆடைப் பொறுப்பாளனிடம், “பாகாலின் ஊழியர்கள் அனைவருக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடு” என்றான். அவ்வாறே, அவன் அவர்களுக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடுத்தான்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏகூ மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களை நோக்கி, “பாகாலுக்கு ஆகாபு சிறிதளவு ஊழியமே செய்தான். ஏகூவாகிய நானோ பேரளவு ஊழியம் செய்யப் போகிறேன். எனவே, பாகாலின் வாக்குரைப்போர் அனைவரையும் அதற்கு ஊழியம் செய்யும் எல்லாரையும் அதன் அர்ச்சகர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள். அவர்களில் ஒருவரும் வரத் தவறக்கூடாது. ஏனெனில், நான் பாகாலுக்கு ஒரு மாபெரும் பலி செலுத்த வேண்டியிருக்கிறது. வராதவர் அனைவரும் உயிரிழப்பர்” என்றான். பாகாலுக்கு ஊழியம் செய்வோரை ஒழித்துக்கட்டும் நோக்கிலேதான் இவ்வாறு ஏகூ சூழ்ச்சி செய்தான்.

மேலும் ஏகூ, “பாகாலுக்கென்று ஒரு திருவிழா கொண்டாடுங்கள்” என்று ஆணையிட்டு, இஸ்ரயேல் நாடெங்கும் ஆள்களை அனுப்பி, பாகாலுக்கு ஊழியம் செய்தோர் அனைவரையும் வரவழைத்தான். அவர்களுள் எவனும் வரத் தவறவில்லை. அவர்கள் பாகாலின் கோவிலினுள் நுழைந்தனர். பாகாலின் கோவில் ஒருமுனை முதல் மறுமுனை வரை நிறைந்திருந்தது. அப்பொழுது ஏகூ ஆடைப் பொறுப்பாளனிடம், “பாகாலின் ஊழியர்கள் அனைவருக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடு” என்றான். அவ்வாறே, அவன் அவர்களுக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடுத்தான். பிறகு, ஏகூ இரேக்காபின் மகன் யோனதாபுடன் பாகாலின் கோவிலினுள் நுழைந்தான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2024, 10:10