communio அறிக்கையை வெளியிடும் இந்திய தலத்திருஅவை தலைவர்கள் communio அறிக்கையை வெளியிடும் இந்திய தலத்திருஅவை தலைவர்கள் 

இந்திய திருஅவையின் பிறரன்பு பணிகளுக்கு இறைபராமரிப்பே காரணம்

Communio பிறரன்பு அமைப்பு, துவக்க கால திருஅவையின் ஒன்றிப்பையும் தூய ஆவியின் வல்லமையையும் எதிரொலிக்கும் விதமாக ஒருமைப்பாடு எனும் உணர்வை கொண்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இந்தியா முழுவதும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களை சிறப்புடன் திட்டமிட்டு செயல்படுத்தி வரும் இந்திய தலத்திருஅவையின் Communio என்ற அமைப்பின் பணிகளுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் CCBI எனும் இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால்  Filipe Neri Ferrão.

இந்திய திருஅவையின் அனைத்து பிறரன்பு நடவடிக்கைகளுக்கும் இறைபராமரிப்பே காரணம் என உரைத்த கர்தினால் Ferrão அவர்கள்,  Communio என்பது துவக்க கால திருஅவையின் ஒன்றிப்பையும் தூய ஆவியின் வல்லமையையும் எதிரொலிக்கும் விதமாக ஒருமைப்பாடு எனும் உணர்வை தன்னுள் கொண்டுள்ளது என உரைத்தார்.  

குஜராத் மாநிலத்தின் பெதாபூர் என்னுமிடத்திலுள்ள திரு இருதய ஆலயத்தில் Communio அமைப்பின் அறிக்கை வெளியிடப்பட்டபோது உரையாற்றிய கர்தினால் Ferrão, இவ்வமைப்பின் பணிகளைப் பாராட்டியதோடு, இதன் பணிகள் தொடர மக்களின் ஆதரவையும் விண்ணப்பித்தார்.

2018ஆம் ஆண்டு இந்திய ஆயர் பேரவையால் துவக்கப்பட்ட இந்த பிறரன்பு அமைப்பு, இதுவரை 250 கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி அதற்கு பொருளுதவியும் ஆற்றியுள்ளது. தற்போது ஏறக்குறைய 100 திட்டங்கள் கிராமப்புற வளர்ச்சிக்கென செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2024, 16:50