உக்ரைனுக்கான காரித்தாஸ் உதவி உக்ரைனுக்கான காரித்தாஸ் உதவி  (ANSA)

உக்ரைனில் துன்புறும் மக்களுக்கு இத்தாலிய காரித்தாஸின் திட்டம்

இத்தாலியக் கரித்தாஸ் அமைப்பு : உக்ரைனின் கிழக்குப் பகுதியில் மக்கள் உணவு, நீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளின்றி துன்புறுகின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உக்ரைனில் போரால் துன்புறும் மக்களுக்கு உதவுவதற்கென வளர்ச்சிக்கான கூட்டுறவு என்ற இத்தாலிய அமைப்புடன் இணைந்து இத்தாலிய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

உக்ரைன் மக்களுக்கான அவசர கால உதவி மற்றும் புனரமைத்தலுக்கான உதவி என்ற பெயரில் S.U.P.E.R. என்ற திட்டத்தை வகுத்துள்ள வளர்ச்சிக்கான இத்தாலிய கூட்டுறவு அமைப்பும், இத்தாலிய காரித்தாஸ் அமைப்பும், உக்ரைன் மற்றும் அதன் அண்மை நாடுகளின் தல காரித்தாஸ் அமைப்புக்களின் வழி தங்கள் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

இரஷ்யா மற்றும் உக்ரைன் மோதல்களால் வெகு அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் மக்கள் குடிபெயரப்பட்டு உணவு, நீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளின்றி துன்புறுவதாகக் கூறும் இத்தாலியக் கரித்தாஸ் அமைப்பு, இத்தகைய பிரச்னைகளுடன் இணந்து வேலைவாய்ப்பின்மை, ஏழ்மை அதிகரிப்பு, மனநல பாதிப்புக்கள், அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளும் மக்களை நசுக்குவதாக தன் கவலையை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மக்களுக்கான அவசரகால மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கென இத்தாலிய கூட்டுறவு வளர்ச்சி அமைப்பு 18 இலட்சம் யூரோக்களும், இத்தாலியக் காரித்தாஸ் அமைப்பு ஒரு இலட்சத்து 30 ஆயிரம் யூரோக்களும் வழங்கியுள்ளன.

SUPER என பெயரிடப்பட்டுள்ள புதிய திட்டத்தின் வழி, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவ உள்ளதாக இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2024, 13:20