கிழக்கு திமோர் அரசுத்தலைவருடன் தலத்திருஅவை த் தலைவர்கள் கிழக்கு திமோர் அரசுத்தலைவருடன் தலத்திருஅவை த் தலைவர்கள்  (ANSA)

திருத்தந்தையின் கிழக்கு திமோர் திருப்பயண ஏற்பாடுகள்

கிழக்கு திமோர் திருப்பயண தயாரிப்பு நிலைகள் குறித்து அந்நாட்டு கர்தினால் அவர்களை பேராயர் இல்லத்திற்குச் சென்று சந்தித்து கலந்துரையாடிய அரசுத்தலைவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கிழக்கு திமோர் நாட்டில் திருத்தந்தையின் திருப்பயணம் இடம்பெறவிருக்கும் நிலையில், அது குறித்த தயாரிப்புகளுக்கென அந்நாட்டு அரசுத்தலைவர், திலி பேராயர் இல்லம் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி முதல் 11 வரை கிழக்கு திமோரில் திருப்பயணம் மேற்கொள்வது தொடர்புடய தயாரிப்பு நிலைகள் குறித்து திலி பேராயர், கர்தினால் Virgílio do Carmo da Silva அவர்களை பேராயர் இல்லத்திற்குச் சென்று சந்தித்த அரசுத்தலைவர் José Manuel Ramos-Horta அவர்கள், தயாரிப்பு விவரங்களை பகிர்ந்து கொண்டதுடன், திருஅவையின் ஏற்பாடுகள் குறித்த விவரங்களையும் தெரிந்து கொண்டார்.

தலத்திருஅவை, அரசுத்துறைகள், கிழக்குத் திமோருக்கான திருப்பீடத் தூதரகம் போன்றவைகளின் ஒத்துழைப்புடன் இடம்பெறும் திருத்தந்தையின் திருத்தூதுப்பயண தயாரிப்பு ஏற்பாடுகள் எவ்விதம் சென்றுகொண்டிருக்கின்றன என்பது குறித்து அலசவும், வருங்கால தயாரிப்புகள் குறித்து ஆராயவும் அரசுத்தலைவருக்கும் கர்தினாலுக்கும் இடையேயான சந்திப்பு உதவியுள்ளது என்றார், திருப்பீடப் பணிகள் அமைப்பின் கிழக்கு திமோர் தேசியத் தலைவர் அருள்பணி Bento Pereira.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2024, 11:40