தூய மரிய மதலேன் தூய மரிய மதலேன் 

நேர்காணல் - துணிவு நிறைந்தவரான தூய மரிய மதலேன்

துணிவின் அடையாளமாகக் கருதப்படும் தூய மகதலா மரியா அவர்களின் திருவிழா ஜூலை 22 ஆம் நாள் திருஅவையில் கொண்டாடப்படுகின்றது.
அருள்தந்தை. ரா. ஜானி சகாயராஜ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

பயமின்மை, அச்சமின்மை, தைரியம், அஞ்சாமை, துணிச்சல், தெளிவு, மனத்திட்பம், நம்பிக்கை, நோக்கம், ஆண்மை, உறுதி என துணிவிற்கு பல பொருள் உண்டு. விவிலியத்தில் கூறப்படும் ஒரு சில பெண்களில் மிகச்சிறந்ததாகக் கருத்தப்படுபவர் அன்னை மரியா. அவருக்கு அடுத்தபடியாக அதிகமாக பேசப்படும் பெண் மகதலா மரியா என அழைக்கப்படும் மரிய மதலேன். துணிவின் அடையாளமாகக் கருதப்படும் தூய மகதலா மரியா அவர்களின் திருவிழா ஜூலை 22 ஆம் நாள் திருஅவையில் கொண்டாடப்படுகின்றது. அதனை முன்னிட்டு மதலேன் மரியா பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்தந்தை. ரா. ஜானி சகாயராஜ்.

கோயம்புத்தூர் மறைமாவட்டத்தைச் சார்ந்த குருவாக 2021 ஆம் ஆண்டு மே 3 நாள் அருள்பொழிவு பெற்ற தந்தை அவர்கள் தனது முதல் ஆண்டில் கோயம்புத்தூர் இளங்குருமட உதவி அதிபராகப் பணியாற்றினார். இரண்டாம் ஆண்டு புனிதமிக்கேல் அதிதூதர் பேராலய உதவி பங்குத்தந்தையாகவும் மூன்றாம் ஆண்டு அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தின் உதவி பங்குத்தந்தையாகவும் பணியாற்றி உள்ளார். தற்பொழுது உரோமில் உள்ள திருச்சிலுவைக் கல்லூரியில் சமூக தொலைத்தொடர்பு பற்றிய படிப்பினைப் பயின்று கொண்டிருக்கின்றார். தந்தை அவர்களை தூய மரிய மதலேன் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2024, 10:20