தூய தோமையார் மலை தேசிய திருத்தலம் தூய தோமையார் மலை தேசிய திருத்தலம்  

நேர்காணல் – தூய தோமையார் மலை தேசிய திருத்தல வரலாறு

தூய தோமையார் மறைசாட்சியாக மரித்த இடமான சென்னையில் உள்ள தூய தோமையார் மலை தேசிய திருத்தலமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை தூய தோமையார் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது. அவ்வகையில் வரும் ஜூலை 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவிழா கொண்டாடப்பட இருக்கின்றது.
நேர்காணல் – அருள்பணி மைக்கேல் A.D.

மெரினா ராஜ் – வத்திக்கான்

என் ஆண்டவரே என் தேவனே என்ற நம்பிக்கையின் வார்த்தைகள் வழியாக அகில உலக மக்கள் அனைவருக்கும் அறிமுகமானவர் தூய தோமையார். இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் தூய தோமாவின் திருவிழாவினை திருஅவை கடந்த ஜூலை மூன்றாம் தேதி சிறப்பித்து மகிழ்ந்தது. திருத்தூதர் தோமையார் மறைசாட்சியாக மரித்த இடமான சென்னையில் உள்ள தூய தோமையார் மலை தேசிய திருத்தலமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை தோமையார் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது. 500 ஆண்டுகள் பழமையான இந்த தேசிய திருத்தலத்தின் வரலாறு, பாரம்பரியம், தொன்மைகள், பக்தி முயற்சிகள் பற்றி இன்றைய நம் நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி மைக்கேல் A.D. செங்கல்பட்டு மறைமாவட்ட அருள்பணியாளரான மைக்கேல் A.D அவர்கள் தூய தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் அதிபராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். தந்தை அவர்களை அத்திருத்தலம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2024, 10:54