அரண்மனை முற்றத்தில் அரசி அத்தலியா அரண்மனை முற்றத்தில் அரசி அத்தலியா 

தடம் தந்த தகைமை – அரசியான அத்தலியாவின் இறப்பு

படைத் தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் அரசியான அத்தலியா கண்டாள். இதனைக் காண பொறுக்காத அவள் உடனே தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “சதி! சதி!” என்று கூக்குரலிட்டாள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அரச மரபுக்கேற்ப, அரசன் தூணருகில் நிற்பதையும், படைத் தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் அரசியான அத்தலியா கண்டாள். இதனைக் காண பொறுக்காத அவள் உடனே தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “சதி! சதி!” என்று கூக்குரலிட்டாள். இக்குரலைக் கேட்ட குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்களை நோக்கி, “படையணிகளுக்கு வெளியே அவளைக் கொண்டு செல்லுங்கள். அவளை எவனாவது பின்பற்றினால் அவனை வாளால் வெட்டி வீழ்த்துங்கள்” என்று கட்டளையிட்டார். மேலும் “அவளை ஆண்டவரின் இல்லத்தினுள் கொல்லலாகாது” என்றும் கூறியிருந்தார். எனவே, அவர்கள் அரண்மனையின் குதிரை நுழைவாயிலை அவள் அடைந்தபொழுது, அவளைப் பிடித்தனர். அங்கே அவள் கொல்லப்பட்டாள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2024, 12:46