காணிக்கைகளைச் சேகரிக்கும் குருக்கள் காணிக்கைகளைச் சேகரிக்கும் குருக்கள் 

தடம் தந்த தகைமை – ஆலயப் பணிக்கான நிதி திரட்டல்

வாயிலைக் காவல் செய்த குருக்கள் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்த பணம் அனைத்தையும் அதில் போட்டு வந்தனர்

மெரினா ராஜ் – வத்திக்கான் 

யோவாசு அரியணை ஏறிய இருபத்து மூன்றாம் ஆண்டுவரை, குருக்கள் கோவிலைப் பழுதுபார்க்கவே இல்லை. எனவே, அரசன் யோவாசு குரு யோயாதாவையும் ஏனைய குருக்களையும் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நீங்கள் ஏன் கோவிலைப் பழுது பார்க்கவில்லை? உங்களுக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பணத்தை வாங்கி வைத்துக்கொள்ளாதீர்கள். அதைக் கோவிலைப் பழுதுபார்க்கக் கொடுத்து விடுங்கள்” என்றான்.

அவ்வாறே, குருக்கள் மக்களிடமிருந்து பணத்தை இனி பெற்றுக் கொள்வதில்லை என்றும், கோவிலைப் பழுதுபார்க்கும் பொறுப்பேற்பதில்லை என்றும் ஏற்றுக் கொண்டனர். குரு யோயாதா ஒரு பணப் பெட்டியை எடுத்து, அதன் மூடியில் துளையிட்டு, கோவிலின் நுழைவாயிலின் வலப்பக்கமாக பீடத்தருகே வைத்தார். வாயிலைக் காவல் செய்த குருக்கள் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்த பணம் அனைத்தையும் அதில் போட்டு வந்தனர். அப்பணப் பெட்டியில் அதிகப் பணம் சேர்ந்தபோது, அரசனுடைய கணக்கனும், தலைமைக் குருவும் வந்து ஆண்டவரின் இல்லத்தில் சேர்ந்த பணத்தை எண்ணிப் பைகளில் கட்டி வைத்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2024, 10:07