முத்தமிட்டு காட்டிக்கொடுக்கும் யூதாஸ் முத்தமிட்டு காட்டிக்கொடுக்கும் யூதாஸ் 

தடம் தந்த தகைமை – முத்தமிட்டா

தான் காட்டிக்கொடுக்கப்பட்டபோதும் யூதாஸை 'தோழா' என்றழைத்து உளமார உரையாடும் இயேசுவின் அணுகுமுறை அணுஅணுவாய்ப் பின்பற்றத் தகுந்தது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய், (லூக் 22:48) எனக் கேட்டார் இயேசு.

முத்தம் - கட்டியான அன்பின் அடையாளம். ஆனால் யூதாசினால் இங்கு அது காட்டிக் கொடுத்தலின் அடையாளம் ஆயிற்று. தன்னால் தெரிவுசெய்யப்பட்டு, வழிநடத்தப்பட்டு, உணவு - உடை - உறைவிடம் - குழுமப் பணம் என எல்லாம் பகிரப்பட்டு, தன் பணிப் பயணங்களில் சில மணித்துளிகளுக்கு முன்வரை உணவில் பங்கேற்ற தனது சீடராலே தாம் காட்டிக்கொடுக்கப்படுவது ஒரு துரோகச் செயல் மட்டுமன்று, அகோரச் செயல்.

இந்நிகழ்வை இயேசு உணராதவரோ, தெரியாதவரோ அல்லர். இவை இவ்வாறுதான் நிகழ வேண்டுமென நன்கறிந்தவர். நன்மை நிகழ நம்மோடு திட்டமிட்டவர், இணைந்து செயல்பட்டவர், அதன் வெற்றி தோல்விகளில் பங்கேற்றவர். அதைக் கொண்டே என்றோ ஒருநாள், ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மைச் சிக்கலில் சிக்கவைக்கும்போது நம் மனம்

அனுபவிக்கும் வேதனை சொல்லி மாளா. காட்டிக்கொடுத்த போதும் 'தோழா' என்றழைத்து உளமார உரையாடும் இயேசுவின் அணுகுமுறை அணுஅணுவாய்ப் பின்பற்றத் தகுந்தது. பாசாங்குகளில் கவனமாயிருப்போம். ஏனெனில் இறுதியில் நம் பாசாங்கே வாழ்வாகி விடும்.

இறைவா! வேடமில்லா வாழ்வை உமக்கென வேள்வியாக்கும் வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2024, 13:37