தடம் தந்த தகைமை - கொலை செய்யாதே
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் (மத் 5:21) என்றார் இயேசு.
எல்லா உயிர்களும் கடவுளிடமிருந்தே வருகின்றன. எனவே அவை புனிதமானதும் அவருக்கே உரிமையானதும் ஆகும். ஒரு மனிதரின் உயிரைப் பறிக்க இன்னொருவருக்கு உரிமை வழங்கப்படவில்லை. அதனைக் கடந்து கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட ஒரு மனித உயிரைக் கொன்றால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கடுமையான நியதி உயிரைக் காக்கவேயன்றி அழிக்க அல்ல.
நோவாவுடன் கடவுள் செய்துகொண்ட உடன்படிக்கை வழியாகவே மோசே 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' எனும் சட்டத்தைக் கொடுத்தார். இது ஒரு கொலைக்கு ஈடாக மிருகவுணர்வோடு பல கொலைகளைப் புரியாமல் தடுக்கக் கொடுத்த வரையறையே. ஆனால் எச்சூழலிலும் பிற உயிரைத் தன் உயிராய்ப் பேணும் நல்லுணர்வு ஒரு மனிதரின் அடிப்படைக் குணமாக வேண்டும். இன்று உயிரைப் பறிக்காமல் மனிதரை அணுஅணுவாய்க் கொல்லும் கொலை பாதகச் செயல்கள் கொத்துக் கொத்தாய் நடந்தேறுகின்றனவே உயிர்க்கொலை போலதானே ஒருவரின் பெயர்க்கொலை.
இறைவா! ஒவ்வோர் உயிரும் உம் புதுப் பிறப்பு. அதோடு இணைந்து வாழும் நேய இதயம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்