போதிக்கிறார் இயேசு போதிக்கிறார் இயேசு 

தடம் தந்த தகைமை - விண்ணகத் தந்தை நிறைவுள்ளவர்

விண்ணகத் தந்தை நிறைவுள்ளவர் என்பதால், அவர் படைப்பைப் படைத்து நிறைவு கண்டார். மனிதர் நம் ஒவ்வொருவரையும் பார்த்து நிறைவு காண்கிறார்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் (மத் 5:48) என்றார் இயேசு.

யூதம் தன்னுள் கொண்டிருந்த மரபுகளாலும், சமய-சமூக-சட்ட வரையறைகளாலும் ஒருவிதமான நிறைவற்ற சூழலுக்குள் ஆட்பட்டிருந்தது. அரசியல் - பொருளாதார - கலாச்சார முறைமைகளிலும் அது எதிரொலித்தது. நிறைவற்ற வெறுமையோடு அச்சமூகம் தள்ளாடிக் கொண்டிருந்தது. அந்த நிறைவை நிறைவுள்ளவராய்த் துலங்கும்

விண்ணகத் தந்தையால் வழங்க முடியும் என்ற நம்பிக்கையை இயேசு வழங்கினார்.

விண்ணகத் தந்தை நிறைவுள்ளவர் என்பதால், அவர் படைப்பைப் படைத்து நிறைவு கண்டார். மனிதர் நம் ஒவ்வொருவரையும் பார்த்து நிறைவு காண்கிறார். நம் குறைகள் வேதனைக்குரியதாயினும் மீண்டும் நிறைவின் பாதையில் வழிநடத்த விழைகிறார். மனிதர்களாகிய நாம், பிறரது குறைகளையே கூர்ந்து பார்த்துக் குதர்க்கம் பேசும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருக்கின்றோம். அதனின்று நம்மை மீட்டு இறைமன உணர்வாம் நிறைவு காணும் பாதையில் பயணிப்பதே வாழ்விற்கு அழகு. நிறைவான மனம் பிறர் தவறை ஏறெடுத்துப் பார்க்காது.

இறைவா! நிறைவின் உறைவிடம் நீரே! எங்கும் எதிலும் எப்போதும் நிறைவு எனும் உம்மோடு வாழ வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2024, 12:23