தடம் தந்த தகைமை – இறைவாக்கினர் எலிசாவைச் சந்தித்த அரசன் யோவாசு
மெரினா ராஜ் - வத்திக்கான்
எலிசா நோயினால் வாதைப்பட்டுச் சாகக் கிடந்தபொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாசு அவரிடம் சென்று, “என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே!” என்று அவருக்கு முன்பாகக் கதறி அழுதான். எலிசா அவனை நோக்கி, “வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொள்” என்றார். அவ்வாறே, அவன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டான். அப்பொழுது அவர் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, “வில்லை உன் கையால் வளை” என்றார். எலிசா தம் கைகளை அரசனின் கைகளின்மேல் வைத்து அவனை நோக்கி. “கீழ்ப்பக்கமுள்ள பலகணியைத் திற” என்றார். அவன் அதைத் திறந்தவுடன் எலிசா, “ஓர் அம்பை எய்” என்றார். அவனும் அவ்வாறே எய்தான். அவர், “அது ஆண்டவரது மீட்பின் அம்பு; சிரியர் மீது கொள்ளவிருக்கும் வெற்றியின் அம்பு; நீ அபேக்கில் சிரியரை முற்றிலும் அழிப்பாய்” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்