பாகிஸ்தான் கர்தினால் கூட்ஸ் அவர்களுக்கு மரியாதை பாகிஸ்தான் கர்தினால் கூட்ஸ் அவர்களுக்கு மரியாதை 

கர்தினால் கூட்ஸ் அவர்களுக்கு பாகிஸ்தான் அரசின் விருது

பாகிஸ்தான் நாடு முழுவதும் நல ஆதரவுத் திட்டங்கள், கல்வி, சமூக நலன் போன்றவை மேம்பட உழைத்துள்ளார் கராச்சியின் முன்னாள் பேராயார், கர்தினால் கூட்ஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பல்வேறு மதங்களின் மக்களிடையே அமைதியை நிலை நாட்டுவதில் உழைத்ததற்காக பாகிஸ்தானின் Tamgha-i-Imtiaz  விருது கராச்சியின் முன்னாள் பேராயர், கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின்போது பாகிஸ்தான் அரசுத்தலைவர் Asif Ali Zardari அவர்கள், இவ்வுயரிய விருதை கர்தினால் அவர்களுக்கு அரசு வழங்குவதாக அறிவித்தார்.

தேசத்திற்கு சிறப்புப் பங்காற்றியவர்களுக்கு என சுதந்திரதின விழாக்கொண்டாட்டத்தின்போது அறிவிக்கப்படும் விருதுகளைப் பெறும் 104 பேரில் கர்தினால் கூட்ஸ் அவர்களும் ஒருவர்.

பாகிஸ்தானில் பல்வேறு மத சமுதாயங்களிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும், சமுதாய நலனுக்காகவும், சிறுபான்மையினர் உரிமைக்காகவும் உழைத்ததற்காக இவ்விருதை பாகிஸ்தான் அரசிடமிருந்துப் பெற்றுள்ளார் கர்தினால்.

பாகிஸ்தான் நாடு முழுவதும் நல ஆதரவுத் திட்டங்கள், கல்வி, சமூக நலன் போன்றவை மேம்பட உழைத்துள்ளார் கராச்சியின் முன்னாள் பேராயார், கர்தினால் கூட்ஸ்.

பல்வேறு மதங்களிடையே இணக்க வாழ்வை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கர்தினால் கூட்ஸ் அவர்கள் உழைத்து வருவது அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என கர்தினாலின் பெயரை அறிவித்த விழாவில் தன் பாராட்டுக்களை வெளியிட்டார் அரசுத்தலைவர் Zardari.

இவ்விருதுகள் அடுத்த ஆண்டு, அதாவது 2025ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி சிறப்பிக்கப்படும் பாகிஸ்தான் தினம் என்னும் கொண்டாட்டத்தின்போது வழங்கப்படும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2024, 15:22