திருத்தூதர் பர்த்தலோமேயு திருத்தூதர் பர்த்தலோமேயு 

நேர்காணல் – இறைவனின் கொடையான திருத்தூதர் பர்த்தலோமேயு

நத்தனியேல் என்று யோவான் நற்செய்தியின் முதல் பகுதியில் கூறப்படும் திருத்தூதர் பர்த்தலோமேயு என்னும் பெயருக்கு இறைவனின் கொடை என்பது பொருள்.
அருள்தந்தை இருதய இலாரன்ஸ். உதகை மறைமாவட்டம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசுவின் சீடர்களில் ஒருவரான திருத்தூதர் பர்த்தலோமேயு இயேசுவால் உண்மையான இஸ்ரயேலர் கபடற்றவர் என்று நற்சான்று அளிக்கப் பெற்றவர். ஏழ்மையில் சிறந்து விளங்கிய பர்த்தலோமேயு இயேசுவே இறைமகன் என்று அறிக்கையிட்டவர். இந்தியாவிற்கு மறைப்பணி செய்ய வந்த திருத்தூதர் பர்த்தலமேயு குணமளிக்கும் வல்லமை கொண்டு மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்தார். பாலிமியஸ் அரசரது மனமாற்றத்திற்குக் காரணமாகி அவரை திருமுழுக்கு பெற வைத்த திருத்தூதர் பர்த்தலோமேயு அவர்கள், பக்கத்து நாட்டு அரசன் ஏஸ்ட்ரிகஸ் என்பவரால் வஞ்சமாக கைது செய்யப்பட்டு 68ஆம் ஆண்டு உயிருடன் தோலுரித்து தலைகீழாக நிறுத்தி வைக்கப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

நத்தனியேல் என்று யோவான் நற்செய்தியின் முதல் பகுதியில் கூறப்படும் திருத்தூதர் பர்த்தலோமேயு என்னும் பெயருக்கு இறைவனின் கொடை என்பது பொருள். உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர், என்று இயேசுவால் கூறப்படும் பெரும்பேற்றிற்கு உரியவர். ஆகஸ்ட் 24 அன்று திருஅவையானது திருத்தூதர் பர்த்தலோமேயு விழாவினைச் சிறப்பிக்க உள்ள நிலையில் அப்புனிதர் பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்தந்தை இருதய இலாரன்ஸ்.

உதகை மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்தந்தை இருதய இலாரன்ஸ் அவர்கள், திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற தன்னையேத் தயாரித்துக் கொண்டிருக்கின்றார். பங்குத்தந்தையாகவும் ஆயர் செயலராகவும் திறம்பட பணியாற்றிய அருள்தந்தை இலாரன்ஸ் அவர்கள்,  கடந்த 5 வருடங்களாக கோயம்புத்தூர் நல்லாயன் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக திருஅவை சட்டங்கள் கற்பித்து வந்துள்ளார். தந்தை அவர்களை திருத்தூதர் பர்த்தலோமேயு பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2024, 10:35