டாக்டர் இராதாகிருஷ்ணன் டாக்டர் இராதாகிருஷ்ணன் 

நேர்காணல் – அகஇருள் நீக்கி அறிவொளியூட்டும் ஆசிரியர்கள்

பகுத்தறியும் பண்பை உணர்த்தும் பகலவனாய், கல்விக்கண் திறக்கும் ஆசானாய், அரவணைத்து அறிவு அமுதப்பால் ஊட்டும் தாயாய் நம்மை வளர்த்தெடுப்பவர்கள் ஆசிரியர்கள்.
ஆசிரியர் தினம் - அருள்பணி அந்தோணி இயேசுராஜ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒரு மாணவனை மனிதனாக மாற்றும் மகத்தான ஆற்றல் பெற்றவர் ஆசிரியர். மங்கி எரிகின்ற திரியாகிய மாணவர்களின் அறிவாற்றலை கல்வி வழியாக தூண்டிவிட்டு சுடர்விட்டு எரியச்செய்பவர் ஆசிரியர். நூலால் உயரும் பட்டம்போல் மாணவர்கள் வாழ்வு நூல்களால் சிறந்திட வழிவகுப்பவர். பகுத்தறியும் பண்பை உணர்த்தும் பகலவனாய், கல்விக்கண் திறக்கும் ஆசானாய், அரவணைத்து அறிவு அமுதப்பால் ஊட்டும் தாயாய் நம்மை வளர்த்தெடுப்பவர்கள் ஆசிரியர்கள். இத்தகைய பெருமை பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி சிறப்பிக்கும் விதமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் நாள் தேசிய ஆசிரியர் நாள் சிறப்பிக்கப்படுகின்றது.

தேசிய ஆசிரியர் நாள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது பிறந்த நாளன்று இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இன்றைய நமது நேர்காணலில் தேசிய ஆசிரியர் தினம் பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்துகொள்பவர் அருள்பணி அந்தோணி இயேசுராஜ். கோயம்புத்தூர் மறைமாவட்ட அருள்பணியாளரான இவர் 8 ஆண்டுகள், கவுண்டம்பாளையம் புனித ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வராகப் பணியாற்றியுள்ளார். பங்குப் பணியில் மிகுந்த ஈடுபாடும், சமூகப்பணியில் தாராளமான மனமும், கல்விப் பணியில் புதுமையும் கொண்டு சிறந்த பல செயல்களை ஆற்றும் அருள்தந்தை அந்தோணி இயேசுராஜ் அவர்களை தேசிய ஆசிரியர் தினம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2024, 08:39