தூய பவுல் பெருங்கோவில் புனிதக்கதவு தூய பவுல் பெருங்கோவில் புனிதக்கதவு 

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 –தூயபவுல் பெருங்கோவில் புனிதக்கதவு

புனிதக் கதவின் கீழே இலத்தீன் மொழியில் தூய பவுலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பெருங்கோவிலுக்கு வரும் மக்கள் அனைவருக்கும் அமைதியின் பரிசும், நிலையான மீட்பும் கிடைக்கப்பெறும் என்று எழுதப்பட்டுள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உரோம் நகரின் நான்கு மிக்கிய பெருங்கோவில்களுல் ஒன்றான தூய பவுல் பெருங்கோவிலில் உள்ள புனிதக் கதவானது (மீ 3.71 x 1.82) 3.71 மீட்ட நீளமும் 1.82 அகலமும்  கொண்டது. 2000ஆம் ஆண்டு யூபிலியின்போது திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ரீக்கோ மன்பீரினி என்பவரால் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட இப்புனிதக் கதவில் யூபிலிக்கான மூன்று ஆண்டு தயாரிப்புக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை விண்ணகத்தந்தையின் எல்லையற்ற இரக்கம், நற்செய்திப்பணியில் மிக முக்கியமானவரான தூயஆவியார், மீட்பராகிய இறைமகன் என்பது பொறிக்கப்பட்டுள்ளது.  மேலும் புனிதக் கதவின் கீழே இலத்தீன் மொழியில் தூய பவுலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பெருங்கோவிலுக்கு வரும் மக்கள் அனைவருக்கும் அமைதியின் பரிசும், நிலையான மீட்பும் கிடைக்கப்பெறும் என்று எழுதப்பட்டுள்ளது.  “Ad sacram Pauli cunctis venientibus aedem - sit pacis donum perpetuoquoe salus”)

புனிதக்கதவில் கீழிருந்து மேலாக இடப்புறத்தில், சிலுவையில் அறையப்பட்ட இயேசு, உயிர்த்த இயேசு, தூயஆவியார் அன்னை மரியா மற்றும் சீடர்கள் மேல் இறங்கி வந்தது. அதற்கு நேராக வலப்புறத்தில், திருஅவையின் தந்தையர்கள் இறைமக்கள் மேல் காட்டும் இரக்கம், நற்செய்திக்காகத் தங்களது இன்னுயிரை இழந்தோர். புனித கதவு திறக்கும் நிகழ்வு ஆகியவை சித்தரிக்கப்பட்டுள்ளன. யூபிலி ஆண்டிற்காக நம்மையே நாம் தகுந்த முறையில் தயாரித்துக் கொண்டிருக்கும் நாம் நமது பழைய பாவ இயல்புகளை விடுத்து புனிதத்துவ வாழ்க்கை வாழ முயற்சிப்போம். அமைதியை எடுத்துச் செல்பவர்களாக வாழ இறையருள் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2024, 14:09