பல்சமயக் கூட்டத்தில் பங்கேற்றோர் பல்சமயக் கூட்டத்தில் பங்கேற்றோர்  (ANSA)

உடன்பிறந்த உறவைக் கொண்டாடும் பல்சமயக் கூட்டம்

ஏறக்குறைய 100 மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று விளையாட்டு எவ்வாறு மனிதனுக்கும் மனித குலத்திற்கும் சிறந்தத்தைக் கொண்டு வரமுடியும் என்பது பற்றிய தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் இடம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆழமான சமயத்தொடர்பு உடைய இடமாகவும், உலகளாவியக் கருத்துக்களை வெளிப்படுத்தும் இடமாகவும் இருக்கின்றது என்று கூறியுள்ளார் ஆயர் Emmanuel Gobilliard

ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக்கிழமை பாரீசின் நோத்ரே டாம் கத்தோலிக்க பேராலயத்தின் முன் நடைபெற்ற பல்சமய கூட்டத்தின்போது இவ்வாறு கூறியுள்ளார் தீங்னே மறைமாவட்ட ஆயர் Emmanuel Gobilliard.

100 ஆண்டுகளுக்குப் பின்பு உடன் பிறந்த உறவைக் கொண்டாடும் ஒரு பலசமயக் கூட்டமாக இக்கூட்டம் அமைந்தது என்றும், குறிப்பிட்ட சமயத்திற்கான வழிபாடுகள் செபங்கள் என ஏதுமின்றி பல்சமயத்தை வலியுறுத்தும் பாடல்கள் பாடப்பட்டதும் அமைதியில் இறைவனைப் புகழ்ந்ததும் மிக அழகான செயலாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார் ஆயர் Gobilliard

கிறிஸ்தவம், யூதம், இந்து, முஸ்லீம், புத்தம், என ஐந்து மிக முக்கியமான மதத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சகோதரத்துவ உறவைப் புதுப்பித்துக் கொண்டார்கள் என்று தெரிவித்துள்ள ஆயர் Gobilliard அவர்கள், ஏறக்குறைய 100 மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று விளையாட்டு எவ்வாறு மனிதனுக்கும் மனித குலத்திற்கும் சிறந்தத்தைக் கொண்டு வரமுடியும் என்பது பற்றிய தங்களதுக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள் என்றும் கூறியுள்ளார்

100 ஆண்டுகளுக்கு முன்பு, பாரிஸில் முந்தைய ஒலிம்பிக் போட்டிகளின் போது,​​நோட்ரே-டேம் பேராலயத்தில் பல்சமயமதங்களுக்கு இடையே ஒரு விழா நடந்தது என்று நினைவுகூர்ந்துள்ள ஆயர் Gobilliard அவர்கள், 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள், மக்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான சகோதரத்துவத்தைக் கொண்டாடுவதற்காக ஒரு பல்சமயக் கூட்டமாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2024, 14:00