சூடான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் தொடரும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
பெரும் உள்நாட்டு மோதல்களாலும் கட்டாய இடம்பெயர்வுகளாலும் மனிதாபிமான நெருக்கடிகளைச் சந்தித்துவரும் சூடான் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தைகள் உடனடியாக இடம்பெற வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
சூடான் நாட்டின் பல பகுதிகள் வாழ்வதற்கு ஆபத்து நிறைந்தவைகளாக இருப்பதால் தலைநகர் Khartoumலிருந்து தானும் பல கத்தோலிக்க விசுவாசிகளும் தென்சூடான் தலைநகர் Jubaவில் அடைக்கலம் தேடியுள்ளதாக அறிவித்தார் al-Ubayyid மறைமாவட்டத்தின் அருள்பணி Biong Kwol Deng.
உள்நாட்டு மோதல்களின் காரணமாக சூடானில் தண்ணீர், உணவு மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் இடம்பெற்றுவருவதாகவும், இதனால் அனைத்து புலம் பெயர்ந்த மக்களும் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் கவலையை வெளியிட்டார் அருள்பணி Kwol.
இதற்கிடையே, அரசுக்கும் புரட்சிக்குழுக்களுக்கும் இடையே அண்மையில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதரவுடன் சவுதி அரேபியாவின் Jeddahவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் எவ்வித தீர்வுகளையும் தராத நிலையில், மீண்டும் இப்பேச்சுவார்த்தைகள் இப்புதனன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் துவங்க உள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்