நிகராகுவா நாட்டுக் கொடி நிகராகுவா நாட்டுக் கொடி  (ANSA)

நிகராகுவாவில் அருள்பணியாளர்கள் கடத்தப்படுதல் அதிகரிப்பு

கடத்தப்பட்ட அருள்பணியாளர்கள் இதுவரை எங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும், எந்தக் காரணத்திற்காக கடத்தப்பட்டனர் என்பது பற்றிய தெளிவும் இதுவரை கிடைக்கப்படவில்லை

மெரினா ராஜ் - வத்திக்கான்

நிகராகுவாவில் கடந்த ஐந்து நாள்களில் கடத்தப்பட்டுள்ள எட்டு அருள்பணியாளர்கள் மற்றும் ஓர் அருள்பணித்துவ மாணவர்களில் பெரும்பாலோனோர் மதகல்பா மறைமாவட்டத்தை சார்ந்தவர்கள் என்று நிகராகுவா செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 2 வெள்ளிக்கிழமை மதகல்பா மறைமாவட்ட அருள்பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த நாள்களில் மூன்று கடத்தல்கள் நடைபெற்றுள்ளன என்றும், இத்தகைய சூழல் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளன நிகராகுவா செய்திகள்.

கடத்தப்பட்ட அருள்பணியாளர்கள் இதுவரை எங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும், எந்தக் காரணத்திற்காக கடத்தப்பட்டனர் என்பது பற்றிய தெளிவும் இதுவரை கிடைக்கப்படவில்லை என்றும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.  

ஆகஸ்ட் 2 வெள்ளிக்கிழமை கடத்தப்பட்ட அருள்பணியாளர்கள் Jairo Pravia, Victor Godoy, Marlon Velasquez, Antonio Lopez, Raúl Villegas, Francisco Tercero, Silvio Romero, மற்றும் அருள்பணித்துவ மாணவர் Erwin Aguirrepastor ஆகியோராவர்.

ஜூலை 27 சனிக்கிழமை எஸ்தெல்லி மறைமாவட்ட நிர்வாகியான 80 வயது மதிக்கத்தக்க அருள்பணியாளர் Frutos Constantino Valle Salmerón அவர்கள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 வியாழக்கிழமை திருப்பலி நிறைவில் இரண்டு அருள்பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2024, 15:11