தடம் தந்த தகைமை – யோவாசுக்குப்பின் இஸ்ரயேலின் அரசனான எரோபவாம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
யூதாவின் மக்கள் இஸ்ரயேலரிடம் தோல்வியுற்று, தம் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர். இஸ்ரயேலின் அரசன் யோவாசு பெத்செமேசில் அகசியாவின் மகனான யோவாசின் புதல்வனும் யூதாவின் அரசனுமான அமட்சியாவைக் கைது செய்து, எருசலேமைத் தாக்கச் சென்றான். அவன் எருசலேமின் மதிற் சுவரில், எப்ராயிம் வாயில் முதல் மூலை வாயில்வரை நானூறு முழ நீளம் இடித்துத் தள்ளினான். ஆண்டவரின் இல்லத்திலும் அரசமாளிகையின் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லாப் பொன்னையும், வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டான். மேலும், அவன் சிலரைப் பிணையாளராகப் பிடித்துக் கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிச் சென்றான்.
யோவாசின் பிற செயல்களைப் பற்றியும் யூதா அரசன் அமட்சியாவுடன் இட்ட போரில் அவன் காட்டின பேராற்றலைப் பற்றியும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன. யோவாசு தன் மூதாதையரோடு துயில் கொண்டு சமாரியாவில் இஸ்ரயேல் அரசர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் எரோபவாம் அரசனானான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்