கோவிலில் இயேசு கோவிலில் இயேசு 

தடம் தந்த தகைமை - ஓய்வு நாளில் நன்மையா தீமையா?

சட்ட சகதிக்குள் சறுக்கிக் கிடந்த தன் சமூகத்தைத் தூக்கி நிறுத்த பல்வேறு யுக்திகளை இயேசு கையாள வேண்டிய நிர்ப்பந்த நிலையில், அருஞ்செயல்களை அரங்கேற்றினார்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

சூம்பிய கையருக்கு குணமளிக்குமுன் இயேசு, மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயரிடம், ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை? (மாற் 3:3&4) என்று கேட்டார்.

நாம் நல்லவரா, கெட்டவரா என்றறிய நமது ஒரு சொல் அல்லது ஒரு செயல் போதும். இயேசுவுக்கு தான் யார் என்றோ, நல்லவர் என்றோ நிரூபிக்கத் தேவையில்லை. ஆனால் சமூகப் புதுப்பித்தலின் தேவையை உணர்ந்தார். சட்ட சகதிக்குள் சறுக்கிக் கிடந்த தன் சமூகத்தைத் தூக்கி நிறுத்த பல்வேறு யுக்திகளை அவர் கையாள வேண்டிய நிர்ப்பந்த நிலை இருந்தது. அதனில் தனது நிலைப்பாட்டையும் நேயத்தையும் வெளிப்படுத்த அருஞ்செயல்களை அரங்கேற்றினார்.

தொழுகைக்கூடம் தொழுவதற்கான இடம். ஆனால் பல வேளைகளில் அது குறைகூறல் எனும் தொழுநோய்க் கூடமாக ஆகிவிட்டது. அங்கு அந்த ஓய்வு நாளில் இயேசு சந்தித்த சூம்பிய கையரின் கை மட்டுமல்ல, அங்கிருந்த ஏனையோரின் மனங்களும் சூம்பியிருந்தன. எப்படி எதிர்க்கலாம், எப்படி ஒழிக்கலாம் என்பதே அவர்களின் நோக்கம்.

இத்தகையோரின் சட்ட, சமய, கலாச்சார ஒடுக்குதலால் சூம்பிய கையர் அச்சமூகத்தில் விழுந்து கிடந்தார். அவரை எழச் செய்வதும், அதே சமூகத்தில் மையப்படுத்துவதும் தன் கடமையென உணர்ந்து செயல்பட்ட இயேசுவின் செயல் ஒரு புயல் போன்ற புரட்சிச் செயல். நல்ல செயலைப் பாராட்டாமல் புறப்படும் ஒவ்வொரு சொல்லும் பாவமே.

இறைவா! எந்தெந்த நிலையில் யார் யார் விழுந்து கிடக்கிறார்கள் என்பதைக் கண்டுணர்ந்து அவர்களைத் தூக்கி நிறுத்த ஆற்றல் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2024, 13:18