அருளாளர் கார்லோ அகுதீஸ் அருளீக்கம் சான்று வாழ்வின் அடையாளம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அருளாளர் கார்லோ அகுதீஸ் அவர்களின் சான்றுள்ள வாழ்வானது அவரது அருளீக்க நினைவுச்சின்னங்கள் வழியாக நமது வாழ்க்கை முழுவதும் தொடரும் என்றும், திருநற்கருணையில் இயேசுவின் உண்மையான மற்றும் அன்பான உடனிருப்பை அறிந்து கொள்வதன் வழியாக அவரிடம் நாம் நெருங்கி வர இயலும் என்றும் கூறியுள்ளார் ஆயர் மார்க் டேவிஸ்.
வருகின்ற செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை முதல் 23 திங்கள் கிழமை வரை கனடா நாட்டில் Shrewsbury மறைமாவட்டத்தில் உள்ள தூய அந்தோணியார் ஆலயத்திற்கு அருளாளர் கார்லோ அகுதீஸ் அவர்களின் அருளீக்க நினைவுச்சின்னங்கள் கொண்டு வரப்பட உள்ள நிலையில் அது குறித்த நிகழ்வுகள் பற்றி எடுத்த்துரைக்கையில் இவ்வாறு கூறினார் Shrewsbury மறைமாவட்ட ஆயர் மார்க் டேவிஸ்
இரண்டாம் நூற்றாண்டின் இளம் புனிதராக அறிவிக்கப்பட உள்ள அருளாளர் கார்லோ அகுதீஸ் அவர்களின் இதயமானது அருளீக்கமாக மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டு செபம் மற்றும் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்பட இருக்கின்றது என்று எடுத்துரைத்த ஆயர் டேவிஸ் அவர்கள், இணையத்தை புதிய வழி நற்செய்தி அறிவிப்பிற்காகப் பயன்படுத்தி கடவுளை சென்றடைய உதவும் மனிதராக அருளாளர் கார்லோ விளங்கினார் என்றும் கூறினார்.
செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை முதல் 23 திங்கள் கிழமை வரை தூய அந்தோணியார் ஆலயத்தில் கார்லோ அகுதீஸ் அருளீக்கம் மக்களின் பார்வையில் வைக்கப்பட்டு சிறப்பு செப வழிபாடுகளுடன் கொண்டாடப்பட இருக்கின்றது என்றும் கூறினார் ஆயர் டேவிஸ்.
2012 ஆண்டு தூய ஜான் மரிய வியானியின் அருளீக்கம், 2022 ஆம் ஆண்டு லூர்து நகர் காட்சி கண்ட தூய பெர்னதெத் அருளீக்கங்கள் ஷ்ரூஸ்பரி மறைமாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு மக்களின் சிறப்பு செப வழிபாடுகள் நடத்தப்பட்டதை நினைவுகூர்ந்த ஆயர் டேவிஸ் அவர்கள், இத்தகைய புனிதர்களின் அருளீக்கத்தைத் தொடர்ந்து அருளாளர் கார்லோ அகுதீஸ் அவர்களின் அருளீக்கம் மக்களிடையே வர இருப்பது பெரும்பாலான மக்களை கடவுள் பக்கம் ஈர்க்கும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்