அரசன் ஆகாசு அரசன் ஆகாசு  

தடம் தந்த தகைமை – யூதாவின் அரசனான ஆகாசு

ஆகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபது. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் தன் மூதாதையான தாவீதைப் போல் தன் கடவுளான ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இரமலியாவின் மகன் பெக்கா ஆட்சியேற்ற பதினேழாம் ஆண்டில் யூதா அரசன் யோத்தாமின் மகன் ஆகாசு அரசனானான். ஆகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபது. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் தன் மூதாதையான தாவீதைப் போல் தன் கடவுளான ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. இஸ்ரயேல் அரசர்களின் வழியிலேயே தானும் நடந்து, இஸ்ரயேலரின் பார்வையில் ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் அருவருப்பான வழக்கத்தின்படியே தன் மகனைத் தீயிலிட்டுப் பலியாக்கினான்.

மேலும், தொழுகை மேடுகளிலும், குன்றுகளிலும், செழித்த மரங்களின் அடியிலும் பலியிட்டுத் தூப வழிபாடு நடத்தி வந்தான். அப்பொழுது சிரியாவின் மன்னன் ரேட்சீனும் இஸ்ரயேலின் அரசனும் இரமலியாவின் மகனுமான பெக்காவும் எருசலேமுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்து, ஆகாசுக்கு எதிராக முற்றுகையிட்டனர். ஆனால், அவர்களால் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2024, 13:33