தடம் தந்த தகைமை - இஸ்ரயேல் அரசன் பெக்ககியா
மெரினா ராஜ் - வத்திக்கான்
யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற ஐம்பதாம் ஆண்டில், மெனகேமின் மகன் பெக்ககியா இஸ்ரயேலின் அரசனாகிச் சமாரியாவில் ஈராண்டுகள் ஆட்சி செய்தான். அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியைவிட்டு அவன் விலகவில்லை. இரமலியாவின் மகனும் படைத் தலைவனுமான பெக்கா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து தன்னோடு இருந்த ஐம்பது கிலயாதியரோடு சமாரியாவிலுள்ள அரண்மனைக் கோட்டைக்குள் புகுந்து அரசனையும், அர்கோபு, அரியே என்பவர்களையும் கொன்று அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான். பெக்ககியாவின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்