அரசன் யோத்தாம் அரசன் யோத்தாம் 

தடம் தந்த தகைமை - யூதா அரசன் யோத்தாம்

பெக்கா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசனும் அசரியாவின் மகனுமான யோத்தாம் அரசன் ஆனான். அவன் அரசனான போது, அவனுக்கு வயது இருபத்தைந்து.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இஸ்ரயேலின் அரசனும் இரமலியாவின் மகனுமான பெக்கா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசனும் அசரியாவின் மகனுமான யோத்தாம் அரசன் ஆனான். அவன் அரசனான போது, அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகளான எருசா என்பவளே அவனுடைய தாய்.

அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து, அவன் தந்தை அசரியா செய்தது போலவே, அனைத்தையும் செய்தான். ஆயினும், அவன் தொழுகை மேடுகளை அழிக்கவில்லை. இன்னும் மக்கள் அம்மேடுகளில் பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர். கோவிலின் உயர்வாயிலைக் கட்டியவன் இவனே.

யோத்தாமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன. அந்நாள்களில் ஆண்டவர் சிரியாவின் மன்னன் ரெட்சீனையும் இரமலியாவின் மகன் பெக்காவையும் யூதாவுக்கு எதிராய் அனுப்பத் தொடங்கினார். யோத்தாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தன் தந்தையாகிய தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆகாசு அரசனானான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2024, 13:09