ஆயர் Paskalis Bruno Syukur ஆயர் Paskalis Bruno Syukur 

குருத்துவ வாழ்வில் வளர வேண்டி, கர்தினால் பதவியை மறுக்கும் ஆயர்

இந்தோனேசிய பிரான்சிஸ்கன் துறவுசபை அதிபராக பணியாற்றியுள்ள அருள்பணி Bruno Syukur அவர்களை, போகோர் மறைமாவட்ட ஆயராக 2013ல் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தான் குருத்துவ அருள்பணித்துவ வாழ்வில் மேலும் வளர வேண்டியிருப்பதால் தன்னை கர்தினாலாக உயர்த்தவேண்டாம் என திருத்தந்தைக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார் அண்மையில் புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்ட இந்தோனேசிய ஆயர் Paskalis Bruno Syukur.

இம்மாதம் 6ஆம் தேதி ஞாயிறன்று திருஅவையில் 21 புதிய கர்தினால்களை அறிவித்து டிசம்பர் மாதம் 7ஆம் தேதி அவர்களை கர்தினால்கள் அவைக்கூட்டத்தில் கர்தினால்களாக உயர்த்தவுள்ள நிலையில், தான் குருத்துவ அருள்பணித்துவ வாழ்வில் இன்னும் வளரவேண்டியிருப்பதால் தன்னை கர்தினாலாக உயர்த்தவேண்டாம் என்ற இந்தோனேசியாவின் போகோர் மறைமாவட்ட ஆயர் Bruno Syukur அவர்களின் விருப்பத்தை ஏற்றுள்ளார் திருத்தந்தை.

தற்போது டிசம்பர் மாதத்தில் 21 கர்தினால்களுக்குப் பதில், 20 கர்தினால்களே திருஅவையில் புதிதாக உயர்த்தப்பட உள்ளனர்.

இந்தோனேசிய பிரான்சிஸ்கன் துறவுசபையின் மாகாண அதிபராக 2001 முதல் 2009 வரை பணியாற்றியுள்ள ஆயர் Bruno Syukur  அவர்களை போகோர் மறைமாவட்டத்தின் ஆயராக 2013 நவம்பர் 21ல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்தார்.

1962ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி இந்தோனேசியாவின் Flores தீவில் உள்ள Ruteng மறைமாவட்டத்தில் பிறந்த ஆயர் Bruno Syukur அவர்கள், 1991ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு பிரான்சிஸ்கன் துறவு சபையில் பல்வேறு பணிகளை பொறுப்பேற்று ஆற்றியபின், 2013ஆம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்படார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2024, 15:22