திருஅவையின் புனிதர்கள் திருஅவையின் புனிதர்கள் 

நேர்காணல் - புனித வாழ்வை, நிலைவாழ்வை வலியுறுத்தும் நவம்பர் மாதம்

புனிதர்களின் எடுத்துகாட்டான வாழ்வை நினைவுகூர்ந்து பார்க்க நமக்கு அழைப்புத் தருகின்றது அனைத்து புனிதர்களின் திருவிழா. நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது அனைத்து ஆன்மாக்கள் திருவிழா
நேர்காணல் - அருள்தந்தை சுரேஷ் இயேசு பாலன் ச.ச.

மெரினா ராஜ் - வத்திக்கான்

 “யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான புனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கேற்ப புனிதர்களின் எடுத்துகாட்டான வாழ்வை நினைவுகூர்ந்து பார்க்க நமக்கு அழைப்புத் தருகின்றது அனைத்து புனிதர்களின் திருவிழா. எப்போதும் இறைவனின் திருமுன் நின்றுகொண்டு எப்போதும் நமக்காக பரிந்துபேசுபவர்களாக இருக்கின்ற புனிதர்களுக்காக இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். புனிதர்களைப் போன்று நாமும் நல்வழியில் நடந்து புனித நிலையை அடையவேண்டும் என்பதையே இவ்விழா நமக்கு சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது.

நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது அனைத்து ஆன்மாக்கள் திருவிழா. இறந்த ஆன்மாகளுக்காக, குறிப்பாக உத்தரிக்க ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்காக செபிக்க அழைப்புத் தருகின்றது. இறைவன் தரும் மகிமையை, விண்ணகத்தைப் பெறவேண்டும் என்றால், நம்மோடு வாழக்கூடிய சின்னஞ் சிறிய சகோதரிகளுக்கு நம்மாலான உத்திகளைச் செய்யவேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றது இவ்விழா. புனித வாழ்வு நிலை வாழ்வு என்பதை நினைவுகூரும் இந்த நவம்பர் மாதத்தில் இவ்விரு விழாக்களையும் பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்தந்தை சுரேஷ் இயேசு பாலன். சலேசிய சபையைச் சார்ந்தவரான இளம் அருள்தந்தை சுரேஷ் இயேசுபாலன் அவர்கள், வேலூர் மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். மனிதம் போற்றும் கிறிஸ்தவம் என்னும் கருத்தியலை மையமாகக் கொண்டு தத்துவஇயலில் முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். குருத்துவ அருள்பொழிவுபெற்று இரண்டாண்டுகளை நிறைவுசெய்துள்ள அருள்தந்தை சுரேஷ் அவர்கள் தற்போது உரோமில் உள்ள இலாத்தரன் திருப்பீட இறையியல் பல்கலைக்கழகத்தில் மேய்ப்புப்பணி இறையியலில் முதுகலைக்கல்வி பயின்று கொண்டிருக்கின்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2024, 13:12