நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்பணி Thomas Oyode நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்பணி Thomas Oyode  (Nigerian Catholics)

மாணவர்களை மீட்க தன்னை தந்த அருள்பணியாளர்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்தந்தையர்களின் நீண்ட பட்டியலில் மேலும் ஒருவராக, அண்மையில் அருள்தந்தை தாமஸ் ஓயோட் அவர்கள் கடத்தப்பட்டுள்ளார்

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்தந்தையர்களின்   நீண்ட பட்டியலில் மேலும் ஒருவராக, அண்மையில்  அருள்தந்தை  தாமஸ் ஓயோட், இரண்டு மாணவர்களுக்கு ஈடாக தன்னைப் பணயக் கைதியாக முன்வைத்தார் என்று FIDES செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று, இரவு 7 மணியளவில், தெற்கு நைஜீரியாவின் எடோ மாநிலத்தின்  அகெனெகாபோடில் உள்ள அமலோற்பவ அன்னை இளங்குருமடத்திற்குள் நுழைந்த ஆயுதமேந்திய நபர்கள் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பின்னர் குருமடத்திலிருந்து இரு மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், இளங்குருமடத்தின் தலைவர் அருள்தந்தை   தாமஸ் அவர்கள், முற்றத்திற்குச் சென்று, இரண்டு மாணவர்களுடன் அக்கொள்ளையர்களை எதிர்கொண்டதோடு, இரண்டு மாணவர்களுக்கு ஈடாகத் தன்னைப் பணயக் கைதியாக முன்வைத்தார் என்றும் FIDES செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அருள்தந்தை தாமஸ் அவர்களின்  கோரிக்கையை ஏற்று கடத்தல்காரர்கள் அவரை இரண்டு மாணவர்களுக்கு  பதிலாக கடத்திச் சென்றதாகவும் இதற்கிடையில், கடத்தல்காரர்களைக் கண்டுபிடித்து அருள்தந்தை தாமஸ் அவர்களை  விடுவிக்க ஒரு படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் FIDES செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும்,  குருமடத்தின் துணைத்தலைவர்  மற்றும் குருமானவர்கள் அனைவரும் கன்டுபிடிக்கப்பட்டு  பாதுகாப்பாக உள்ளனர் என்றும், இளங்குருமடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்   பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் வரை தற்காலிகமாக பாதுகாப்பான இடத்திற்கு அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர் என்றும் FIDES செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2024, 14:51