தடம் தந்த தகைமை : மன்னர் அகஸ்வேர் மனதில் மொர்தக்காய்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அன்றிரவு மன்னருக்குத் தூக்கம் வரவில்லை. எனவே, அவர் தம் ஆட்சியின் குறிப்புகள் அடங்கிய ஏட்டைத் தம்மிடம் கொண்டுவந்து வாசிக்குமாறு பணித்தார். அரண்மனை வாயிற்காவலர்களான அலுவலர் பிக்தானாவும், செரேசும், மன்னர் அகஸ்வேரை கொல்ல வகை தேடினதை மொர்தக்காய் அறிவித்ததாக அதில் எழுதப்பட்டிருந்தது. அச்சமயம் மன்னர், “இதற்காக மொர்தக்காய்க்கு என்ன மரியாதையும் சிறப்பும் செய்யப்பட்டன?” என்று வினவ, மன்னரின் பணியாளர் “அவருக்கு யாதொன்றும் செய்யப்படவில்லை” என்றனர். “முற்றத்தில் இருப்பது யார்?” என்று மன்னர் வினவினார். தான் நாட்டிய தூக்குமரத்தில் மொர்தக்காயைத் தூக்கிலிட வேண்டும் என்று மன்னரிடம் வேண்டுவதற்காய் ஆமான் அவ்வமயம் அரசமாளிகையின் வெளிமுற்றத்தில் வந்து நின்றான்.
மன்னரின் பணியாளர் மன்னரை நோக்கி, “இதோ, ஆமான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்” என்றனர். உடனே மன்னர் அவனை உள்ளே வரச்சொன்னார். ஆமானிடம், “மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று மன்னர் வினவினார். “என்னைவிட வேறு எவருக்கு மன்னர் மரியாதை செய்ய விரும்புவார்?” என்று ஆமான் தன் உள்ளத்தில் நினைத்துக் கொண்டான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்