அசீரியர்கள் பகுதியில் ஏவிவிடப்பட்ட சிங்கங்கள் அசீரியர்கள் பகுதியில் ஏவிவிடப்பட்ட சிங்கங்கள் 

தடம் தந்த தகைமை - இஸ்ரயேலில் குடியேறிய அசீரியர்கள்

அசீரியர்கள் சமாரியாவில் வாழத் தொடங்கியபோது ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை. எனவே, ஆண்டவர் அவர்கள் நடுவே சிங்கங்களை ஏவிவிட, அவை அவர்களுள் சிலரைக் கொன்று போட்டன.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பாபிலோன், கூத்தா, அவ்வா, ஆமாத்து, செபர்வயிம் ஆகியவற்றினின்று அசீரிய மன்னன் ஆள்களைக் கொண்டு வந்து, இஸ்ரயேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியா நகர்களில் குடியேற்றினான். அவர்கள் சமாரியாவை உரிமையாகக் கொண்டு அதன் நகர்களில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அங்கு வாழத் தொடங்கியபோது ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை. எனவே, ஆண்டவர் அவர்கள் நடுவே சிங்கங்களை ஏவிவிட, அவை அவர்களுள் சிலரைக் கொன்று போட்டன.

எனவே, “நாட்டினின்று அப்புறப்படுத்திச் சமாரியாவின் நகர்களில் நீர் குடியேற்றிய இந்த மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது. எனவே, அவர் அவர்களிடையே சிங்கங்களை அனுப்பியுள்ளார். இதோ, அவை அவர்களைக் கொன்று கொண்டிருக்கின்றன! ஏனெனில், அவர்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது என்று அசீரிய மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2024, 13:33