குணமளிக்கும் இயேசு குணமளிக்கும் இயேசு 

தடம் தந்த தகைமை - நீர் நலமடைந்துள்ளீர்

தவறினாலும் தாயன்போடு ஏற்கும் பரிவுள்ளம் பஞ்சமாகிப்போன இக்காலத்தில் இயேசுவின் வார்த்தைகள் நெஞ்சம் வருடுவதாய் உள்ளன.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல் நலமற்றிருந்து நலம் பெற்றவரிடம், ‘இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடனாது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனி பாவம் செய்யாதீர் (யோவா 5:14) என உரைத்தார் இயேசு.

இயேசு ஒரு மிகச் சிறந்த ஆற்றுப்படுத்துநர். நீண்ட ஆண்டுகளாய் நலமற்றுக் கிடந்தவரைச் சந்தித்து நலமீந்து அனுப்பிவிட்டார். மீண்டுமாக அவரைச் சந்தித்து ‘நீர் நலமடைந்துள்ளீர்’ எனச் சொல்லி நம்பிக்கை ஊட்டி, நல்வாழ்வு தொடர்வதற்கான பாதை காட்டுகின்றார். நீண்ட காலப் படுக்கை நோயாளியான அவர் நொடிப்பொழுதில் நலம் பெறல் என்பதை அவரே நம்பியிருப்பாரா? இந்த எண்ணம் நலம் பெற்றவரிடம் இருந்திருக்கக்கூடும். அவரது சந்தேகத்தை முறியடிக்கவே இயேசு நேர்நிலை அணுகுமுறையை இங்கே கையாள்கிறார்.

சமூகத்தில் பெரும்பாலும் எதிர்மறை அணுகுமுறையும் நலம் பெற்றவரை முழுமையாக ஏற்றுக் கொள்ளா மனநிலையும் இருந்த நிலையில்தான் இயேசுவின் இச்செயல் அவருக்கு ஊட்டமளிக்கிறது. ஏராளமான நலமிழப்பிற்குத் தனிமனித, சமூகத் தவறுகளும் காரணமாக உள்ளன என்பதை இங்கே சுட்டிக்காட்டுகின்றார். தவறினாலும் தாயன்போடு ஏற்கும் பரிவுள்ளம் பஞ்சமாகிப்போன இக்காலத்தில் இயேசுவின் இவ்வார்த்தை நெஞ்சம் வருடுவதாய் உளது. ஒரு மனிதரைத் தெரியும் என்பது அவரது முகத்தை அல்ல, இதயத்தை.

இறைவா! நேர்நிலை அணுகுமுறையை நீர் பெரிதும் விரும்புகின்றீர். உம் விருப்பப்படிச் செயல்பட உறுதி தாரும்

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2024, 11:48