ஆண்டவரே அனைத்தையும் ஆள்பவர் ஆண்டவரே அனைத்தையும் ஆள்பவர் 

தடம் தந்த தகைமை : தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை

தராசு கொண்டு எடைபோட்டு அதற்கேற்பத் தீர்ப்பும் தண்டனையும் வழங்கக் காத்திருப்பவரல்லர் இறைவன். எல்லாரும் சகோதர உறவில் நிலைக்க வேண்டும் என்பதே அவரது ஏக்கம்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

  • தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை (யோவா 5:22,23) என்கிறார் இயேசு.

நம் தந்தையாம் கடவுள் அன்பு வடிவானவர். அந்த அன்புதான் இரக்கமாகி நமக்கெனச் சுரக்கின்றது. அவரது பிள்ளைகளாகிய நாம் தவறிழைக்கும் போது தராசு கொண்டு எடைபோட்டு அதற்கேற்பத் தீர்ப்பும் தண்டனையும் வழங்கக் காத்திருப்பவரல்லர். எல்லாரும் சகோதர உறவில் நிலைக்க வேண்டும் என்பதே அவரது ஏக்கம். அந்த சகோதரத்துவம் மானுட மதிப்பிலும், கரிசனையிலும் மனிதரிடையே ஒளிரச் செய்யவே தம் மகனாம் இயேசுவை நம்மிடை அனுப்பினார்.

அன்பு மதிப்புணர்வில் தொடங்குகிறது. எங்கு மதிப்பு மிதிபடுகிறதோ அங்கு மனிதமும், மனிதமாய் வாழும் இறைமையும் சிதைவுறுகிறது. சக மனிதரை மதிக்கத் தெரியாத, விரும்பாத ஒருவரின் இறைத்துதிப்பு முழுக்க முழுக்க வேடம் புனைந்த நாடகமே. உலகில் மாபெரும் மனிதர்கள் கருத்துக்களைக் குறித்து விவாதிக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் நிகழ்ச்சிகளைக் குறித்து விவாதிக்கிறார்கள். மட்டமான மனிதர்கள் நபர்களைக் குறித்து விவாதிக்கிறார்கள். உண்மையான இறைத்துதி மனித மதிப்பில் தொடங்குகிறது.

இறைவா! குற்றம் கூறல், தீர்ப்பிடல், தண்டனை அளித்தல் எனும் சிந்தனைகளில்கூட என்னை விழவிடாதேயும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2024, 11:16