கிறிஸ்து அரசர் கிறிஸ்து அரசர் 

தடம் தந்த தகைமை – நீராக இதைக் கேட்கிறீரா?

இயேசுவின் வல்ல செயல்களைக் கண்ணுற்ற கடைநிலை மக்கள் அவரை அரசராகவே (யோவா 6:15) பார்த்தனர். இது உரோமையருக்கு எதிரான கருத்தியல்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீ யூதரின் அரசனா? என்று பிலாத்து கேட்க, நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா? (யோவா 18:33,34) என்று கேட்கிறார் இயேசு.

ஆளும் நிலையில் இருந்தவர்களுக்குத் தங்களைத் தவிர வேறு ஒருவரை அரசராகப் பார்ப்பதும் ஏற்பதும் மிகக் கடினமான ஒன்று. இயேசுவின் பிறப்பை அறிந்து அவரைச் சந்திக்க வந்த ஞானியர் அவரை ‘யூதர்களின் அரசர்’ என்று ஏரோதுவிடம் குறிப்பிட, எருசலேம் முழுவதும் கலங்கிற்று (மத் 2:2-3). இயேசுவின் வல்ல செயல்களைக் கண்ணுற்ற கடைநிலை மக்கள் அவரை அரசராகவே (யோவா 6:15) பார்த்தனர். இது உரோமையருக்கு எதிரான கருத்தியல். இதனை முன்னிறுத்தியே இயேசுவை உரோமையரின் கோபக்கனலுக்கு இரையாக்கினர் யூதர்கள்.

எனவேதான் இயேசுவை விசாரிக்கும் நேரத்தில் பிலாத்து இக்கேள்வியை எழுப்பினான். இயேசு தன்னுள் ஆட்சிமுறை மாற்றம் பற்றிய எண்ணம் கொண்டிருந்தாரே தவிர ஆட்சிப் பிடிப்புப் பற்றித் துளியும் நினைக்கவில்லை. ஆனால் இயேசு அரசராவதற்கான அடிமட்ட

வேலைகளைத் தொடர்வதாக வதந்திகள் பரப்பப்பட்டதோடு அவை பிலாத்துவின் காதுவரை எட்டின. நம் சமூகத்தில் ‘போட்டுக் கொடுத்தல்’ ‘கோள் சொல்லுதல்’, ‘வதந்தி பரப்புதல்’ ‘கதை கட்டுதல்’ ‘போட்டு வாங்குதல்’ போன்ற எல்லாமே இதுபோன்ற ஆளுமைச் சாகடிப்புகள். உண்மையைச் சார்ந்து வாழ்ந்தால் உள்ளத்துள் உறுதி பிறக்கும்.

இறைவா! பிறரின் பெயரைக் கெடுப்பது, அவர்களின் உயிரை எடுப்பது என்றுணர்ந்து அத்தீமையில் விழாது வாழ வழிநடத்தும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2024, 11:07