உரை வழங்கும் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருபினி உரை வழங்கும் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருபினி 

தேசிய கத்தோலிக்க ஊடக மாநாடு!

பவுலோ ருபினி மற்றும் Nataša Govekar இருவரும் இம்மாட்டின் பங்கேற்பாளர்களுக்கு திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை பணிகள் பற்றிய சிறந்த அறிவை வழங்கினர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வாழ்க்கையின் அனைத்து அளவீடுகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை உணர்ந்து, கிறிஸ்துவின் நற்செய்தியை மிகவும் பொருத்தமான முறையில் அறிவிக்க உலகலாவியத் திருஅவை அதன் திறனைப் பயன்படுத்த முயலும் வகையில் இந்தியாவின் பெங்களூருவில் தேசிய கத்தோலிக்க ஊடக மாநாடு சிறப்பாக நடைபெற்றதாக செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது.

நவம்பர் 23- 24, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், இந்தியாவின் பெங்களூருவிலுள்ள புனித யோவான் மருத்துவக் கல்லூரியில் இம்மாநாடு இடம்பெற்றது என்றும், இதில் அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவியர் உட்பட ஏறத்தாழ 285 பேர் பேரார்வமுடன் பங்கேற்று பயனடைந்தனர் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் உரைக்கிறது.

அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் இந்த டிஜிட்டல் யுகத்தை திறம்பட வழிநடத்தவும், தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி அவர்களின் இறைப்பணியை மேம்படுத்தவும், திருஅவையின் பணியை வலுப்படுத்தவும் "Illuminare 2024: Nurturing Digital Stewardship" என்ற மையக்கருத்துத் தேர்வு செய்யப்பட்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) சமூகத் தொடர்புத் துறை,  இந்திய ஆயர் பேரவை, ஆசிய ஆயர் பேரவையின் கூட்டமைப்பு, இந்திய துறவியர் பேரவை ஆகியவற்றுடன் இணைந்து தொன்போஸ்கோவின் சமூகத் தொடர்பு பிரிவு மற்றும் தெற்காசிய சலேசியன் சமூகத் தொடர்பு அமைப்பு (BOSCOM) இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

இம்மாநாட்டில் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருபினி, திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையின் இறையியல்-மேய்ப்புப் பணித் துறையின் இயக்குனர் Nataša Govekar, பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Derek O’Brien மற்றும் சமூகத் தொடர்பு கவுன்சிலர் அருள்பணியாளர் Gildasio Santos, SDB உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2024, 12:29