Jinotegaவின் ஆயர் Carlos Enrique Herrera Gutiérrez Jinotegaவின் ஆயர் Carlos Enrique Herrera Gutiérrez  

நிகரகுவா ஆயர் Herrera Gutiérrez குவாத்தமாலாவுக்கு நாடுகடத்தப்பட்டார்

Jinotegaவின் ஆயர் Carlos Enrique Herrera Gutiérrez அவர்கள் அந்நாட்டின் அரசு அதிகாரிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டு குவாத்தமாலாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

Jinotega வின் ஆயர், Carlos Enrique Herrera Gutiérrez நிகரகுவா அதிகாரிகளால் குவாத்தமாலாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

மாதகல்பா மறைமாவட்டத்தின் ஆயர் Rolando José Álvarez Lagos, சியுனா மறைமாவட்டத்தின் ஆயர் Isidoro del Carmen Mora Ortega  ஆகியோர் 2024, ஜனவரி 13 அன்று நிகராகுவே அதிகாரிகளால் ஏற்கனவே  நாடு கடத்தப்பட்ட நிலையில், தற்போது நிகரகுவா ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Herrera அவர்கள் நிகரகுவா அதிகாரிகளால் குவாத்தமாலாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

75 வயதான ஆயர் Herrera அவர்கள் Jinotega   மறைமாவட்டத்தின் ஆயராகவும், நிகரகுவா ஆயர் பேரவையின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

நவம்பர் 10ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று  San Juan Bautista பேராலயத்தில் நடைபெற்ற  மாலை திருப்பலியின் போது, உள்ளூர் அரசு அதிகாரிகளின்  தொடர்ச்சியான தொந்தரவுகள் குறித்து ஆயர் அவர்கள் தனது வருத்தத்தை  வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆன்மீக வழிபாடுகளில் அதிகாரிகள் பல இடையூறுகளையும்  கொடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பலியின் புனிதத்துவத்தை மதிக்காமல் அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் செயல்களுக்கு  திருப்பலியின் பாவ மன்னிப்பு வழிபாட்டின் போது ஆயர் அவர்கள் இறைவனிடம் மன்னிப்பு வேண்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆயர் அவர்களின் தலைமையில் ஞாயிறு திருப்பலிகள், நற்கருணை ஆசீர்வாதங்கள் மற்றும் பிற ஆன்மீக நிகழ்வுகளை  ஒளிபரப்பப் பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமும் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிகரகுவா நாட்டு மக்களுக்காக செபிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிகராகுவாவில் உள்ள திருஅவையுடன் தனது ஒருமைப்பாட்டை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2024, 16:03