அசீரிய அரசரின் வாக்கு    அசீரிய அரசரின் வாக்கு  

தடம் தந்த தகைமை – எசேக்கியல் மன்னனுக்கு அசீரிய அரசரின் வாக்கு

அரண்மனையின் மேலாளனும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான செபுனாவும் அரசருடைய பதிவாளனும் ஆசாபின் மகனுமான யோவாகும் அசீரியர்களைச் சந்திக்கச் சென்றனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அசீரியர்கள் புறப்பட்டு எருசலேமை வந்தடைந்து, வண்ணான் துறை வழியருகிலுள்ள மேல் குளத்துக் கால்வாய் அருகே நின்றனர். அப்பொழுது அவர்கள் அரசரைத் தங்களிடம் அழைத்தனர். ஆனால், அரண்மனையின் மேலாளனும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான செபுனாவும் அரசருடைய பதிவாளனும் ஆசாபின் மகனுமான யோவாகும் அவர்களைச் சந்திக்கச் சென்றனர். அப்பொழுது, இரப்சாக்கே அவர்களைப் பார்த்து, “நீங்கள் எசேக்கியாவுக்குக் கீழ்கண்டவாறு கூறுங்கள்: பேரரசராகிய அசீரிய மன்னர் கூறுவது இதுவே:

உனது துணிச்சலின் காரணம் என்ன? வெறும் சொற்கள் போர்த் தந்திரமும் வீரமும் ஆகிவிடுமா? யாரை நம்பி என்னை எதிர்க்கத் துணிகிறாய்? இதோ பார்! தன் மீது சாய்பவனின் உள்ளங்கையைக் குத்திக் கிழிக்கும் பிளவுபட்ட நாணல் குச்சியான எகிப்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்! எகிப்திய மன்னனான பார்வோனும் தன்னை நம்புகிற யாவருக்கும் அவ்விதமே செய்வான். நீ ஒருவேளை, ‘எங்கள் கடவுளான ஆண்டவரின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்’ என்று சொல்லலாம் என்று கூறுங்கள் என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2024, 14:37