மன்னருடன் எஸ்தர் அரசி மன்னருடன் எஸ்தர் அரசி  

தடம் தந்த தகைமை : யூதரின் நிலை குறித்து எஸ்தர் மன்னரிடம் கூறல்!

“உம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருப்பின், அரசே! உமக்கு நலமெனப்பட்டால், எனது விண்ணப்பத்திற்கிணங்க என் மக்களைக் காத்தருளும்" என்று எஸ்தர் வேண்டினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆமானின் மனைவி செரேசு மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் அவனின் வீழ்ச்சிக் குறித்து ஆமானிடம் பேசிக்கொண்டிருக்கையில், மன்னரின் அலுவலர் அவ்விடம் வந்து, எஸ்தர் ஏற்பாடுசெய்திருந்த விருந்திற்கு வருமாறு ஆமானை விரைவுப்படுத்தினர். மன்னரும் ஆமானும் அரசி எஸ்தர் வைத்த விருந்துக்குச் சென்றனர். மன்னர் இரண்டாம் நாள் விருந்தில் திராட்சை மதுவை மீண்டும் அருந்துகையில், எஸ்தரிடம் “எஸ்தர் அரசியே, உன் விண்ணப்பம் யாது? அது உனக்கு அளிக்கப்படும். நீ வேண்டுவது என் அரசின் பாதியே ஆனாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றார்.

அப்பொழுது அரசி எஸ்தர், “உம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருப்பின், அரசே! உமக்கு நலமெனப்பட்டால், எனது விண்ணப்பத்திற்கிணங்க எனக்கும் என் வேண்டுகோளின்படி என் மக்களுக்கும் உயிர்ப்பிச்சை அருள்வீராக! என் மக்களும் நானும் கொலையுண்டு அழிந்து ஒழிந்துபோகும்படி விலை பேசப்பட்டிருக்கிறோம்; ஆண்களும் பெண்களுமாக நாங்கள் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால் கூட நான் மௌனமாய் இருந்திருப்பேன். ஆனால் மன்னருக்கு உண்டாகும் இழப்பிற்கு எதிரியால் ஈடு செய்ய முடியாது” என்று பதிலளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2024, 12:52