படிப்பினைகள் வழங்கும் இயேசு படிப்பினைகள் வழங்கும் இயேசு  

தடம் தந்த தகைமை - சோதனைக்கு உட்படுத்தாதேயும்

திருமுழுக்குப் பெற்று பாலைவனம் சென்ற இயேசுவும் சோதிக்கப்பட்டார். அதனை உள்மன ஆற்றலாலே வென்றார். கடவுளில் ஆழ்ந்திருந்தால் எச்சோதனை வரினும் எல்லாம் தகர்ந்து போகும்

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.(மத் 6:13) என செபிக்கக் கற்றுக் கொடுத்தார் இயேசு.

சோதனை என்ற சொல்லாடல் இருபொருள்பட வருகின்றது. 1. ஆய்ந்து அறிதல் 2. தீவினைத் தூண்டுதல். ஆண்டவர் நம்மை ஆய்ந்து அறிந்தவர் (திபா 139:1). அதேவேளையில், தீவினை செய்யத் தூண்டுபவரா என்ற கேள்வி நம்முள் எழுவது நியாயமே. மானுட வாழ்வு பற்பல போராட்டங்கள் நிறைந்தது. அப்போராட்டங்களில் துணையாளராகவும், தூக்கி நிறுத்துபவராகவும் வலிமை தந்து வழிநடத்துபவர் ஆண்டவர்தாம். எவ்வித சோதனையிலும் நம்மோடு உடனிருப்பவர் அவரே என மறக்க வேண்டாம். சோதனை இரு விதங்களில் நம்மை ஆட்கொள்ளும். 1. உள்ளிலிருந்து எழும் சோதனை 2. வெளியிலிருந்து வரும் சோதனை. வெளிச் சோதனைகளைக் காட்டிலும் மனிதனின் மனதுள் எழும் சோதனையே கடினமானது (மாற் 7:20-23). திருமுழுக்குப் பெற்று பாலைவனம் சென்ற இயேசுவும் சோதிக்கப்பட்டார். அதனை உள்மன ஆற்றலாலே வென்றார். கடவுளில் ஆழ்ந்திருந்தால் எச்சோதனை வரினும் எல்லாம் தகர்ந்து போகும் என்பது உறுதியிலும் உறுதி. சோதனைகளைச் சந்திக்காதவர் வாழ்வில் சாதிப்பதில்லை.

இறைவா! சோதனைகளை ஏராளம் தாரும். அவற்றை எதிர்கொள்ளவும் அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளவும் மனபலம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2024, 13:26