கிறிஸ்து பிறப்பிற்காகத் தயாராகி வரும் சிரியா கிறிஸ்து பிறப்பிற்காகத் தயாராகி வரும் சிரியா  (ANSA)

அனைவரையும் மதிக்கும் நாடாக புதிய சிரியா இருக்க வேண்டும்

சிரிய கிறிஸ்தவர்களாகிய நாம் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் நமது பங்கை ஆற்ற வேண்டும் - பேராயர் ஜோசப் டோப்ஜி

மெரினா ராஜ் – வத்திக்கான்

புதிய சிரியா அனைவரையும் மதிக்கும் நாடாக இருக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் திறந்திருக்கும் ஒரு சிவில் அரசை உருவாக்குவதற்கு கிறிஸ்தவர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்ய விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார் அலெப்போவின் மரோனைட் பேராயர் ஜோசப் டோப்ஜி

சிரியாவில் நிலவி வரும் சூஅல் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேரகாணலில் போது இவ்வாறு எடுத்துரைத்துள்ள அலெப்போவின் மரோனைட் பேராயர் ஜோசப் டோப்ஜி அவர்கள், முன்னாள் சிரிய அரசுத்தலைவர் பஷர் அல் அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கடந்த 10 நாட்களாக சிரியாவில் அமைதியான நிலை உள்ளது என்றும், 54 ஆண்டுகால ஆட்சியின் முடிவை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

சிரியப் பகுதியை இராணுவமயமாக்கும் நோக்கத்துடன், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும், மத்திய கிழக்கு நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவத்தால் 75 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள பேராயர் அவர்கள், டெல் அவிவ் உடனடியாக கோலன் குன்றுகளை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈரான், துருக்கி மற்றும் மாஸ்கோ கோரிக்கை விடுத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிரிய கிறிஸ்தவர்களாகிய நாம் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் நமது பங்கை ஆற்ற வேண்டும் என்றும்,  நாம் இரண்டாம் தரம்' என்று கருதாமல் உடன் பங்காளிகள் என்று கருதி நமது  பங்கை சரியாக ஆற்றவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் டோப்ஜி.

எதிர்காலத்தில் நல்ல ஒரு சிவில் அரசையும், நல்லதை நோக்கும் ஒரு திறந்த அரசியலையும் கட்டியெழுப்புவதற்கு அடித்தளமிடுவது மிக அவசியம் என்றும், அனைவரையும் மதிக்கும் கொள்கைகளுடன், ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் நமது பங்களிப்பை வழங்க வேண்டும் புதிய அரசியல் தராசின் ஊசியாக இருக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2024, 12:56