பாதிக்கப்பட்ட அலேப்போ பகுதி பாதிக்கப்பட்ட அலேப்போ பகுதி  (AFP or licensors)

அமைதிக்கான எதிர்நோக்கை உயிர்த்துடிப்புள்ளதாக வைத்துக்கொள்வோம்

அலெப்போ நகரில் நடந்த குண்டுவெடிப்பினால் மக்களுக்கு உயிர்ச்சேதமோ காயமோ ஏற்படவில்லை கல்லூரியின் கட்டிடங்கள் சேதமாகியுள்ளன - அருள்பணியாளர் பேட்டன்

மெரினா ராஜ் - வத்திக்கான்

அமைதிக்கான எதிர்நோக்கை உயிர்த் துடிப்புள்ளதாக வைத்துக்கொள்ள நம்மை அழைக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு இறைவார்த்தையை மனதில் வைத்து சிரியா நாட்டு மக்களுக்காக செபிப்போம் என்றும், அலெப்போ நகரில் நடந்த குண்டுவெடிப்பினால் உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை கட்டிடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் புனித பூமியின் காவலர் அருள்பணியாளர் பிரான்சிஸ்கோ பேட்டன்.

டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் அலேப்போ பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு குறித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள புனித பூமியின் காவலரான, பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் பிரான்சிஸ்கோ பேட்டன் அவர்கள் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக எடுத்துரைத்து கடவுளுக்கு நன்றி கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நடந்த குண்டுவெடிப்பினால் மக்களுக்கு உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை கல்லூரியின் கட்டிடங்கள் சேதமாகியுள்ளன என்று கூறியுள்ள அருள்பணியாளர் பேட்டன் அவர்கள், அமைதிக்காகத் தொடர்ந்துச் செபிக்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடந்துகொண்டிருக்கும் போர் மற்றும் மோதலினால் அலெப்போவின் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் மற்றும் அச்சம் அதிகரித்து வருவதாக எடுத்துரைத்துள்ள அருள்பணியாளர் பேட்டன் அவர்கள், நீண்ட கால போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து செபிக்க வலியுறுத்தியுள்ளார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2024, 11:40