முதியோருடன் திருத்தந்தை முதியோருடன் திருத்தந்தை  

தாத்தா பாட்டிகள், முதியோர்கள் குறித்த திருத்தந்தையின் டுவிட்டர்

இவ்வாண்டு ஜூலை மாதம் 24ம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான உலகத் தினம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இவ்வாண்டு ஜூலை மாதம் 24ம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான உலகத் தினத்திற்குத்  தன்னால் தேர்வுசெய்யப்பட்டுள்ள தலைப்பு, தலைமுறைகளுக்கிடையே கலந்துரையாடல்கள்களை ஊக்குவிக்கும் நோக்கமுடையது எனத் தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்' எனத் திருப்பாடல் 92லிருந்து எடுக்கப்பட்டுள்ள தலைப்பு, தலைமுறையினரிடையே, குறிப்பாக, தாத்தா பாட்டிகள் மற்றும் பேரக்குழந்தைகளிடையே கலந்துரையாடலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக, பிப்ரவரி 15, செவ்வாய்க்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட முதல் டுவிட்டரில் கூறப்பட்டுள்ளது.

அதேநாளில் திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், மனித குலத்தின் பெரும் புதையலாக இருக்கும் முதியோர் பராமரிக்கப்படவேண்டும், அவர்களே நம் ஞானமும் நினைவும், மனிதகுல, மற்றும் ஆன்மிக மதிப்பீடுகளின் உறைவிடமாக இருக்கும் முதியோர், நம் ஆணிவேராகவும் இருப்பதால் அவர்களுடன் பேரக்குழந்தைகள் இணைந்திருப்பது, இன்றியமையாதது எனக் கூறியுள்ளார்.

மேலும், பொருளாதார, மற்றும் சமூகப் பதட்ட நிலைகளை எதிர்நோக்கி இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், தாத்தா பாட்டிகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இடையேயான சந்திப்பில், தாத்தா பாட்டிகளின் ஞானமும் பேரக்குழந்தைகளின் ஆர்வமும் ஒன்றிணைவது முக்கியத்துவம் நிறைந்தது எனத் தன் மூன்றாவது டுவிட்டர் செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2022, 16:22