புதன் மறைக்கல்வி உரை புதன் மறைக்கல்வி உரை  

மூன்று அருளாளர்களை புனிதர்களாக அறிவிப்பது குறித்த கூட்டம்

அருளாளர்கள் Titus Brandsma, மரிய ரிவியெர், இயேசுவின் மரியா ஆகிய மூவருக்கும் புனிதர் பட்டம் அளிப்பது குறித்த கர்தினால்கள் அவை, வருகிற மார்ச் 4ம் தேதி நடைபெறும்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருப்பீடத் தலைமையகத்தில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் C-9 கர்தினால்கள் அவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், பிப்ரவரி 22, இச்செவ்வாயன்று இரண்டாவது நாளாக கூட்டம் ஒன்றைத் நடத்தி வருகிறது.

கர்தினால்கள் அவை

அருளாளர்கள் Titus Brandsma, மரிய ரிவியெர், இயேசுவின் மரியா ஆகிய மூவருக்கும் புனிதர் பட்டம் அளிப்பது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால்களுடன் வருகிற மார்ச் மாதம் 4ம் தேதி கூட்டம் ஒன்றை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைசாட்சியான அருளாளர் Titus Brandsma அவர்கள், கார்மேல் சபைத் துறவியாவார். அருளாளர் மரிய ரிவியெர் அவர்கள், மரியாவின் காணிக்கை அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தவர். அருளாளர் இயேசுவின் மரியா அவர்கள், லூர்து அன்னையின் கப்புச்சின் அருள்சகோதரிகள் சபையை தோற்றுவித்தவர். 

டுவிட்டர் செய்தி

மேலும், இவ்வாண்டு செப்டம்பரில் சிறப்பிக்கப்படும் குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோர் 108வது உலக நாளுக்கென்று தான் தெரிவுசெய்துள்ள தலைப்புபற்றி தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோருடன் வருங்காலத்தை கட்டியமைப்போம்" என்பதை, வருகிற குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்குரிய தலைப்பாகத் தெரிவுசெய்துள்ளேன், கடவுளின் திட்டத்திற்கேற்ப அமையவுள்ள வருங்காலம் ஒன்றைக் கட்டியமைப்பதற்கு எல்லாரும் நம் பங்களிப்பை வழங்க அழைக்கப்பட்டுள்ளோம் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2022, 13:55